ஆத்தும தாகம்
23 September 2020
B.A. Manakala
தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன். வறண்டதும், விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான நிலத்திலே, என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங். 63:1.
இயேசு, சிலுவையில் மொழிந்த வாக்கியங்களுள் ஒன்று,"தாகமாயிருக்கிறேன்" என்பதாகும். அவரைச் சுற்றி இருந்த ஜனங்கள், அதை சரீரப்பிரகாரமான தாகமாகவே புரிந்து கொண்டனர். அவருடைய தாகமோ, அநேகமாக சரீரப்பிரகாரமான தாகத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.
தாவீது வறண்ட நிலத்திலே இருக்கிறதால், அவர் சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் தாகமாய் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது (63:1). நாம் இவ்வுலகில் வாழ்வதால், சரீரப்பிரகாரமான பல விஷயங்களுக்காக, நாம் தாகமாயிருக்கிறோம். ஆனால், நம்முடைய ஆத்துமாவை திருப்திப்படுத்துவதே மிகவும் முக்கியம்.
ஒருமுறை, இயேசு தாமே சமாரியா ஸ்திரீக்கு ஜீவத்தண்ணீரை வழங்கி, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது. அது அவனுக்குள்ளே நித்திய ஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாய் இருக்கும்" என்றார் (யோவா. 4:13-14).
உலகில் வாழ்கிற இக்காலத்தில், நீங்கள் அதிக அளவு எதற்காக தாகமாய் இருக்கிறீர்கள்?
தண்ணீர், உங்கள் சரீரப்பிரகாரமான தாகத்தை தற்காலிகமாய் திருப்திப்படுத்துகிறது. தேவன் மட்டுமே உங்கள் ஆவிக்குரிய பிரகாரமான பசியை திருப்தியாக்க முடியும்!
ஜெபம்: கர்த்தாவே, என் ஆத்துமா திருப்தி அடைவதற்கு, தினமும் உம்மிடம் இருந்து பருக, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment