மேய்ப்பனுக்கு ஆடு செவிகொடுக்கிறது

Wednesday, July 14, 2021

B.A. Manakala

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக. தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். சங். 53:6.

ஆடுகள், எப்போதுமே தம் மேய்ப்பனின் சத்தத்தைக் கண்டறிந்து, அதற்கு அவைகள் மறுமொழி அளிக்கின்றன. வேறு பல குரல்கள், மேய்ப்பனின் குரலுக்கு மிகவும் ஒத்திருந்தாலும் கூட..., அவற்றால் அவைகள் திசைதிருப்பப்படுகிறதில்லை (யோவா. 10:27).

தம்முடைய ஜனங்களை மட்டும்தான் தேவன் மீட்பாரா? பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் தேவன் மன்னித்து, அவர்கள் அனைவரையும் அவர் மீட்டெடுக்க, நான் விரும்புகிறேன். சொல்லப்போனால்.., உண்மையில் அவருடைய வாஞ்சையும்  கூட அது தானே! (1 தீமோ. 2:4). ஆனாலும்..., தம்மில் விசுவாசம் வைக்கிறதற்கான சுதந்திரத்தை, தேவன் மனிதனிடமே கொடுத்து விட்டார் (யோவா. 3:16).

அவரை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அந்நாளில்தானே நீங்களும் மீட்கப்படுவீர்கள்!

நீங்கள்...தேவனின் சத்தத்தைக் கேட்டும், அறிந்தும் இருக்கிறீர்களா? அப்படியானால்..., நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள்.

ஜெபம்: கர்த்தாவே, உம் சத்தத்தை இன்னும் அதிகமாய்க் கேட்பதற்கு, என் செவிகளைப் பயிற்றுவியும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்