இரக்கமுள்ள தேவன்
B.A. Manakala
தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும். சங். 67:2.
ஒரு நாள்..... பேருந்து நிலையம் ஒன்றில், பிச்சைக்காரர் ஒருவர் என்னிடம் வந்து, 'எனக்கு இரண்டு ரூபாய் கிடைக்குமா?' என்று கேட்டார். நான் அவர் மீது இரக்கப்பட்டு, அவருக்குப் பத்து ரூபாயைக் கொடுத்தேன். அவர் பிரகாசிக்கிற முகத்தோடு போய் விட்டார்.
நம்மீதுள்ள தேவனின் இரக்கம் அளவிட முடியாதது! நம்மேல் உள்ள அவருடைய கிருபை..., நாம் கேட்பதையும், கற்பனை செய்வதையும் விட அதிகமானது.
இந்த பூமியிலே, தேவன் தம்முடைய இரக்கத்தின் பிரதிநிதிகளாக, நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். வேறு விதமாகக் கூறின்..., இந்த உலகத்தின் ஜனங்கள், தேவனுடைய இரக்கத்தை, உங்கள் மூலமாகவும், என் மூலமாகவும் அனுபவிக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையால் தான்..., நம்மால் பிறருக்கு இரக்கம் காண்பிக்க முடிகிறது.
உங்கள் வாழ்வில்..., தேவனின் இரக்கத்தை, நீங்கள் எவ்வளவாய் எதிர்நோக்கி உள்ளீர்கள்? பிறர் உங்களிடம் இருந்து எவ்வளவு இரக்கத்தை எதிர்பார்க்கிறார்கள்?
நாம் எந்த அளவுக்கு மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கிறோமோ..., அந்த அளவுக்கு, தேவன் நம்மிடம் இரக்கமுள்ளவராய் இருப்பார்!
ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னிடம் எவ்வளவு இரக்கமுள்ளவராய் இருக்கிறீரோ, அவ்வளவாய்.., நான் மற்றவர்களிடம் இரக்கமாய் இருக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment