நித்திய ஆசீர்வாதம்
Tuesday, May 25, 2021
B.A. Manakala
தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். சங். 45:2இ.
இவை..., ராஜாவைப் பற்றி, கோராகின் புத்திரரால் சொல்லப்பட்ட வார்த்தைகள். தேவனுடைய ஆசீர்வாதங்களினிமித்தம்.., ராஜா எப்படி இருக்கிறார் என்பதை, வச 3-5 விவரிக்கின்றன. யாருடைய ஆசீர்வாதங்கள் நம்மேல் தங்கியுள்ளன என்பதே முக்கியம். தற்காலிகமானதும், அழிந்துபோகக் கூடியதுமான பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக் குறித்தே..., பெரும்பாலும் நாம் ஆர்வம் கொள்கிறோம். ஆனால்..., நித்தியமான பரலோக ஆசீர்வாதங்களைப் பற்றின நம் சிந்தை என்ன?
ஒருமுறை..., தன் சகோதரனாகிய யாக்கோபு, தன்னை ஏமாற்றி, தன்னுடைய ஆசீர்வாதத்தை எடுத்துக் கொண்ட போது..., ஏசா தன் தகப்பனிடம், "இந்த ஒரே ஒரு ஆசீர்வாதம் மாத்திரம் தானா உம்மிடத்தில் உண்டு? என்னையும் ஆசீர்வதியும்" என்று கெஞ்சி அழுதான்.
பூமியிலே இழந்து போன சிலாக்கியங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள். என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்களுக்காக, எப்போதும் தேவனிடம் ஓடுங்கள்.
பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் தற்காலிகமானவை; பரலோக ஆசீர்வாதங்களோ நித்தியமானவை.
ஜெபம்: கர்த்தாவே, பரலோக ஆசீர்வாதங்களில் கவனம் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment