Posts

Showing posts from July, 2021

யார் உங்களை தப்புவிக்க முடியும்?

Image
Thursday, July 15, 2021 B.A. Manakala தேவனே , உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து , உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும். சங். 54:1. பெலிஸ்தர்கள் , இராட்சத வீரனான கோலியாத்தை தங்கள் மீட்பராகவும் , பாதுகாவலனாகவும் தேர்ந்தெடுத்தனர். சிறிய  இளைஞனான தாவீதோ... , அந்த இராட்சதனுக்கு விரோதமாக யுத்தம் செய்ய.. , தேவனைத் தேர்ந்தெடுத்தான். இறுதியில்... , அந்த இராட்சதன் கொல்லப்பட்டான்! (1 சாமு. 17). பெரும்பாலும்... , நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக , நம்மை உணர்கிறோம். இது ஒருவேளை... பரவாயில்லை எனலாம். ஆனால்.. , நாம் தேவனை விட உயர்ந்தவர்கள் என்று நம்மை நினைத்தால்... , என்ன செய்வது ? உண்மையைச் சொல்லப்போனால்.. , கோலியாத் அப்படித்தான் உணர்ந்ததாகத் தோன்றுகிறது. "நீ எனக்கு விரோதமாக ஒரு தடியோடு வருவதற்கு , நான் என்ன ஒரு நாயா ?" என்று அவன் தாவீதைப் பரிகாசம் பண்ணினான். கர்த்தரே உங்களுடைய வலிமைமிக்க பாதுகாவலர் (உபா. 32:4). அவர் நம்மை சாத்தானிடம் இருந்தும்கூட காப்பாற்றுகிறார். சரியான பாதுகாவலரை நீங்கள் தேர்வு செய்தால் , உங்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது! ஜெபம்: கர்த்தாவே , என் மீட்பராகவ...

மேய்ப்பனுக்கு ஆடு செவிகொடுக்கிறது

Image
Wednesday, July 14, 2021 B.A. Manakala சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக. தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது , யாக்கோபுக்குக் களிப்பும் , இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். சங். 53:6. ஆடுகள் , எப்போதுமே தம் மேய்ப்பனின் சத்தத்தைக் கண்டறிந்து , அதற்கு அவைகள் மறுமொழி அளிக்கின்றன. வேறு பல குரல்கள் , மேய்ப்பனின் குரலுக்கு மிகவும் ஒத்திருந்தாலும் கூட... , அவற்றால் அவைகள் திசைதிருப்பப்படுகிறதில்லை (யோவா. 10:27). தம்முடைய ஜனங்களை மட்டும்தான் தேவன் மீட்பாரா ? பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் தேவன் மன்னித்து , அவர்கள் அனைவரையும் அவர் மீட்டெடுக்க , நான் விரும்புகிறேன். சொல்லப்போனால்.. , உண்மையில் அவருடைய வாஞ்சையும்  கூட அது தானே! (1 தீமோ. 2:4). ஆனாலும்... , தம்மில் விசுவாசம் வைக்கிறதற்கான சுதந்திரத்தை , தேவன் மனிதனிடமே கொடுத்து விட்டார் (யோவா. 3:16). அவரை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அந்நாளில்தானே நீங்களும் மீட்கப்படுவீர்கள்! நீங்கள்...தேவனின் சத்தத்தைக் கேட்டும் , அறிந்தும் இருக்கிறீர்களா ? அப்படியானால்... , நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். ஜெபம்: கர்த்தாவே...