நான் தவறொன்றும் செய்யவில்லை!

B. A. Manakala


என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணை செய்ய விழித்து, என்னை நோக்கிப் பாரும். சங். 59:4.

எனது பள்ளி நாட்களில், சில மேஜைகள் கீழே விழுந்த போது, நானும், எனது மூன்று நண்பர்களும் எனது முதல்வரால் மோசமாக தண்டிக்கப்பட்டோம். நான் குற்றமற்றவன்... ஏனெனில், நான் வேண்டுமென்றே அதில் ஈடுபடவில்லை. 

இங்கே சங்கீதக்காரன் சொல்கிறது, நமக்கும் கூட அடிக்கடி உண்மையாகிறது (59:4). நினைவில் கொள்ளுங்கள்.., காரணமே இல்லாவிட்டாலும் கூட நீங்கள் தாக்கப்படலாம். சொல்லப்போனால், நீங்கள் தேவபக்தியுடன் இருக்கிற போது தான் உங்களுக்கு அதிகமான தொல்லைகள் இருக்கலாம் (2 தீமோ 3:12). ஆனால் அதெல்லாம் தேவன் உங்களைப் பாதுகாக்கவில்லை என்பதினால் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

'எந்தத் தவறும் செய்யக்கூடாது' என்கிற உங்களது விருப்பம், உங்களைச் சுற்றி இருக்கிற அனைவராலும் பாராட்டப்படுகிறது; தேவனும் கூட உங்களில் மகிழ்ச்சி அடைகிறார். கனிவாய், அதில் விடாமுயற்சியுடன் இருங்கள். 

தொடர்ந்து நன்மை செய்கிறதிலே நீங்கள் எவ்விதம் கவனத்தை செலுத்தலாம்? 

வாழ்வில் தொல்லைகள் ஏராளம் இருப்பினும், நன்மை செய்கிறதை விடாப்பிடியாய்த் தொடருங்கள்! 

ஜெபம்: கர்த்தாவே, நான் தவறாய் நடந்து கொண்டே இருந்தாலும், நீர் எனக்கு நன்மை மாத்திரமே செய்கிறீர் என்பதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்