பரலோக சேனைகளின் தேவனாகிய கர்த்தர்!

B.A. Manakala
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ் செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். சங். 59:5.

ஒரு நாள், என் வீட்டிலே, எறும்பு ஒன்று எதையோ சுமந்து செல்கிறதை நான் கண்டேன். அதற்குப் பின்னாலேயே மற்றொரு எறும்பும் அதே பொருளைத் தூக்கிக் கொண்டு செல்வதை விரைவிலேயே நான் உணர்ந்தேன். இறுதியாக, அவை எங்கே இருந்து வருகின்றன என்று நான் கண்டுபிடித்த போது, எனக்கு ஒரே  ஆச்சரியம்! அங்கே ஆயிரக்கணக்கான எறும்புகள் சேர்ந்த ஒரு பெரும் படையே இருந்தது! 

தாவீது தேவனை வெறுமனே 'தேவனே' என்று குறிப்பிடாமல், 'சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே' என்று குறிப்பிடுகிறார். ஒருவேளை, தேவனை ஓர் மிகப்பெரிதான சேனையை உடையவராக தாவீது பார்த்ததே, தன் சத்துருவைச் சிறிதாகக் காணும்படியாக அவருக்கு உதவியிருக்கலாம் (சங். 59:5).

நாம் பல சமயங்களில், நம்முடைய கல்வி, ஆரோக்கியம், அடிப்படை வசதிகள் போன்ற சிறிய தேவைகளுக்காக மட்டுமே தேவனை நம்புகிறோம். நீங்கள் கற்பனை செய்யக்கூடியதை விட, பெரிதான  காரியங்களை தேவனால் செய்ய முடியும். அவருக்கு ஒப்பானவர் ஒருவரும் இல்லை! (சங். 86:8).

உங்களது கடைசி ஜெபத்தையும், உங்கள் ஜெபத்தின் மையக் கருத்தையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் தேவனிடத்தில் என்ன கேட்டீர்கள்? 

தேவனைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். நம் சத்துருவை மிகைப்படுத்தி மதிப்பிடவும் வேண்டாம்! 

ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காக நிறுத்தி வைக்கும் மிகப்பெரிய சேனையைக் காணும்படி என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்