தெரு நாய்களை சட்டை பண்ணாதேயுங்கள்.

B.A. Manakala

அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப் போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். சங். 59:6.

எங்களுடைய சுற்றுப்புறத்திலே ஏராளம் நாய்கள் உள்ளன. இரவிலே அவைகள்  உரத்த சத்தமாய் ஊளையிடுவதால், எங்கள் தூக்கம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.  இரவிலே வெளியே சென்று வர வேண்டுமென்றாலே, சில சமயம்  எங்களுக்கு பயமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் வழியே சென்றால், பொதுவாகவே அவைகள் கண்டு கொள்வதில்லை. 

நம் சத்துருக்கள், இரவிலே சுற்றித்திரிகிற நாய்களைப் போல இருக்கிறார்கள். இரவு நேரங்களில், அவர்கள் மேலும் ஆபத்தானவர்கள். தேவன் கூட இதுபோன்ற நபர்களைப் பார்த்து நகைக்கிறார் (சங். 59:8). அவர் அவர்களைக் கவனித்துக் கொள்ளுவார். ஆனால், நாம் நம்முடைய வழியில் செல்லவும், வேறு மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து, நமது இலக்கிலே கவனத்தை செலுத்தவும், கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். 

உங்கள் கவனம், உங்களுடைய சத்துருவால் திசைதிருப்பப்படுகையில் அவன் மகிழ்கிறான். உங்களைத் தொல்லையிலே இழுத்து விடுவதற்கு, அவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை எல்லாவற்றையும் அவன் செய்வான். 

நீங்கள் தெரு நாய்களால் எளிதாய் திசை திருப்பப்படுகிறீர்களா? நமது இலக்கை நோக்கி நம் கவனத்தை மாற்ற முடியுமா? 

உங்களை திசைதிருப்ப உங்கள் சத்துரு ஏராளம் செய்கிறான். தேவன் மீது கவனத்தை செலுத்துவதற்கு, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். 

ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் உம் மீது கவனம் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்