வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை!

B.A. Manakala
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது. கேட்கிறவன் யார் என்கிறார்கள். சங். 59:7.

நான் இளமையாக இருந்த போது, விலை மதிப்புள்ள ஒரு கோப்பையைக் கை தவறி கீழே போட்டு உடைத்து விட்டேன். எனது அம்மா என்னிடம், "அதனால் பரவாயில்லை, கவலைப்படாதே" என்று கூறினார்கள். மிகவும் பயம் நிறைந்த தருணமாய் அது எனக்கு இருந்தது. ஆனால் என் அம்மாவின் வார்த்தைகளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை! 

இனிய சொற்கள் தேன் போன்றவை. அவைகள் ஆத்துமாவுக்கு மதுரமும், சரீரத்திற்கு ஔஷதமும் ஆகு‌ம் (நீதி. 16:24). வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாய் இருக்க முடியும் என்பதும், அது பிறருக்கு தீங்கிழைக்கிறவைகளாகவோ அல்லது பிறரை ஆசீர்வதிக்கிறவைகளாகவோ இருக்க முடியும் என்பதும் நம் எல்லாருக்குமே தெரியும். 

நாம் பேசுகிற வார்த்தைகள் எல்லாம் நம் உள்ளத்தில் உள்ளவற்றின் வெளிப்புற வெளிப்பாடுகளே ஆகும். நம்மிலே கிரியை நடப்பிக்கிற பரிசுத்த ஆவியானவர், ஆவியின் கனியாகிய அன்பு, நீடிய பொறுமை, சாந்தம் ஆகியவற்றை நம்மில் உருவாக்குகிறார். அவைகள் ஆசீர்வாதமான வார்த்தைகளை நம்மில் உண்டாக்குகின்றன. 

பிறருடைய வார்த்தைகளால் நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்களா?  நீங்கள் அவர்களை மன்னித்து விட்டீர்களா? புண்படுத்தாத வார்த்தைகளை பயன்படுத்துவதில், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எவ்விதம் நம்பலாம்? 

வார்த்தைகள், வாள்கள் இவை இரண்டுமே காயப்படுத்துபவை. ஆனால், வாள்களால் ஏற்படும் காயங்களை விட, வார்த்தைகளால் ஏற்படும் காயங்கள் மோசமானவை. மேலும், அவற்றை குணப்படுத்துவது மிகவும் கடினம்!

ஜெபம்: கர்த்தாவே, நான் எப்போதுமே என் வார்த்தைகளால் பிறரை ஆசீர்வதிக்கத்தக்கதாக, நீர் என்னை உம்முடைய ஆவியினால் இன்னும் அதிகமாய் நிரப்பும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்