கர்த்தர் நம் கேடகம்
B.A. Manakala
அவர்களைக் கொன்று போடாதேயும். என் ஜனங்கள் மறந்து போவார்களே. எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப் போடும். சங். 59:11.
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை, எரிகிற அக்கினிச் சூளைக்குள்ளே தூக்கிப் போடுகையில், தேவன் தாமே அவர்களுடைய கேடகமாக அங்கே தோன்றினதால், அவர்கள் ஒரு சேதமும் அடையாதிருந்தார்கள் (தானி. 3:24-25).
இங்கே தாவீது தேவனை, 'எங்கள் கேடகமாகிய கர்த்தாவே' என்று குறிப்பிடுகிறார். ஒருதடவை, தாவீது கோலியாத்துக்கு விரோதமாக யுத்தம் பண்ணும் பொருட்டு, சவுல் ராஜாவால் வழங்கப்பட்ட மனித போர்க்கவசத்தை அணிந்து கொள்ள முயன்றதை நினைத்துப் பாருங்கள். தேவன் தாமே தாவீதின் கேடயமாய் இருந்தார்; அங்கே கோலியாத்தின் கேடயம் வேலை செய்யவில்லை!
கோலியாத் போன்ற ஒரு ராட்சதனுக்கு எதிராக வேறு யார் கேடகமாக இருக்க முடியும்? அக்கினி ஜூவாலைக்குள்ளே, சிங்கங்களின் கெபிக்குள்ளே, வெள்ளத்திலே, சிறைச்சாலையிலே, பெரும்புயல் கால சூழ்நிலையிலே..?
ஆனால், நீங்கள் வாழ்வின் கடினமான காலகட்டங்கள் வழியாகக் கடந்து செல்கையிலே, கேடயமாய் இருந்து உங்களைப் பாதுகாப்பதை தேவன் நிறுத்தி விட்டார் என்று நினையாதேயுங்கள். அவரது இராஜரீக நோக்கங்கள், இன்னும் உங்களுக்கு நன்மையாகவே இருக்கிறது.
நீங்கள் தேவனை உங்கள் கேடயமாக அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் எப்படி அவரை உங்கள் நிரந்தர கேடயமாக்கிக் கொள்ள முடியும்?
எல்லா விதமான எதிரிகளிடமும் இருந்து, எந்த ஒரு தீங்கும் இல்லாமல், கேடயமாயிருந்து உங்களைப் பாதுகாக்க, தேவனால் மட்டுமே முடியும்!
ஜெபம்: கர்த்தாவே, நான் எப்போதும் உம்மையே என் கேடயமாய் வைத்துக் கொள்வேனாக. ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment