பெருமை, சாபம் மற்றும் பொய்!
B.A. Manakala
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும், சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையிலே அகப்படுவார்கள். சங். 59:12.
ஒரு நாள், என்னுடைய மூக்குக் கண்ணாடி தொலைந்து போனது. நான் அதைத் தேடிக்கொண்டே இருந்தேன். கடைசியில், என் குடும்பத்தார் என்னை முகம் பார்க்கிற கண்ணாடியில் போய் பார்க்கச் சொன்னபோது, நான் அதைக் கண்டுபிடித்தேன். அது என்னுடைய தலையின் மேலே தான் இருந்தது!
உங்களுக்குள்ளேயே இருக்கிற பெருமை, சபித்தல், பொய் ஆகியவற்றால் நீங்கள் சிறைப்படுத்தப்பட முடியும் என்று, இங்கே தாவீது கூறுகிறார் (சங். 59:12).
நம்முடைய சத்துருக்களால் மட்டுமே நாம் சிறைபிடிக்கப்படுகிறோம் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம். பெரும்பாலான வேளைகளில், நம்முடைய எதிரி, நமக்குள்ளேயே இருக்கிறதை நாம் உணர்கிறதே இல்லை. நமக்குள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பல சமயங்களில் நாம் பார்க்கத் தவறுகிற அதே வேளை, மற்றவர்கள் அவற்றை எளிதாகக் கவனித்துவிடக் கூடும். இது மனித இயல்பு.
தேவனுடைய வார்த்தையானது, உங்களுக்குள்ளே இருக்கிற எல்லாவற்றையும், உங்களுக்கு நீங்களே பார்க்க முடியாதவற்றையும் கூட, அலசி ஆராய்ந்து காட்டுகிற சக்தி வாய்ந்த ஓர் கண்ணாடி (யாக். 1:23,24).
உங்களுக்குள்ளேயே இருக்கிற பெருமை, சபித்தல் அல்லது பொய், உங்களது சுய சத்துருவாய் உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்பீர்களா?
உங்களை நீங்களே பார்க்கக் கூடிய மற்ற எந்த விதத்தையும் விட, ஒரு கண்ணாடியில் பார்ப்பது, உங்களுக்கு இன்னும் கூடுதலாகக் காட்டுகிறது.
ஜெபம்: கர்த்தாவே, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பெருமை, சபித்தல், பொய் ஆகியவற்றிற்காக தினமும் நான் மனந்திரும்பவும், அவற்றை இனி ஒரு போதும் என் சத்துருக்களாய் வைத்திருக்காதபடிக்கும், அவைகளை எனக்கு வெளிப்படுத்திக் காட்டுவீராக. ஆமென்!
Comments
Post a Comment