உங்கள் மதிப்பு என்ன?
19 September 2020
B.A. Manakala
கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால், அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். சங். 62:9.
கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு அநாதை இல்லத்தை பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கே..., அழகாய், துறுதுறுவென ஒரு சிறுவன் இருந்தான். அவன், தனது சொந்த தாயாலேயே ஒரு லட்சம் ரூபாய்க்கு (₹ 1,00,000) விற்கப்பட்டான் என்று நான் கேள்விப்பட்ட போது, அதிர்ந்து போனேன்!
நீங்கள் என்னவாய் தோற்றமளிக்கிறீர்களோ, அதன் அடிப்படையில் உங்களை நீங்களே அளந்தால், நீங்கள் வெறும் மூச்சுக்காற்றுக்கு சமம். ஆனால், ஆதியிலே உங்கள் நாசியில் ஊதப்பட்ட ஜீவ சுவாசக் காற்றை, நீங்கள் தொடர்ந்து சுவாசித்தீர்களேயானால், நீங்கள் நினைக்கிறதைக் காட்டிலும், நீங்கள் அதிக மதிப்பு பெற்றவர்கள் ஆவீர்கள் (ஆதி. 2:7).
உலகப்பிரகாரமாக...., நம்மை மதிப்புள்ளவர்களாய் நாம் கருதிக் கொண்டிருக்கிற எல்லாமே, ஒரு நாளில் ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆனால், ஆவிக்குரிய பிரகாரமாக, நீங்கள் என்ன மதிப்புடையவர்களாய் இருக்கிறீர்களோ, அதற்கு நித்திய மதிப்புண்டு.
உங்களுடைய ஆத்துமாவைக் காட்டிலும், விலைமதிப்புமிக்க ஏதாவதொன்று உள்ளதா? (மத். 16:26).
மற்றவர்கள் ஒருவேளை, உங்களுடைய உலகப்பிரகாரமான உடைமைகளின் அடிப்படையில் உங்களை மதிப்பிடலாம். தேவனோ உங்களை ஆவிக்குரிய ரீதியாக மதிப்பிடுகிறார்!
ஜெபம்: கர்த்தாவே, உம் நிமித்தம், எனக்கு என்ன மதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
Comments
Post a Comment