வாழ்வின் மையப்பகுதி
20 September 2020
B.A. Manakala
கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால், இருதயத்தை அதின் மேல் வைக்காதேயுங்கள். சங். 62:10.
நான் என்னுடைய பணப்பையை எங்கே வைக்கிறேன் என்பதைக் குறித்தும், அதை எவ்விதம் கையாளுகிறேன் என்பதைக் குறித்தும் எப்போதுமே மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், படிப்படியாக..., என்னுடைய பணப்பை கிட்டத்தட்ட ஒரு பயனற்ற பொருளாகி விட்டது... ஏனென்றால், இப்பொழுது எல்லா பணப் பரிவர்த்தனைகளும் 'ஜீ-பே' அல்லது பிற மின்னணு முறையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறதே! இப்போதெல்லாம் வெளியே சென்றால், என்னுடைய பணப்பையை எடுத்துச் செல்வது பற்றி நான் கவலைப்படுகிறதே இல்லை!
தேவன் நம் ஒவ்வொருவரையும் அதிக... அல்லது குறைந்த... செல்வத்தைக் கொண்டு ஆசீர்வதிக்கக் கூடும். ஆனால் அச்செல்வம் நம் வாழ்க்கையின் மையப்பகுதியை ஆக்கிரமிக்க.., நாம் அனுமதித்துவிட வேண்டாம். அதை, சுற்றி வர வைக்க... நம்மால் முடிகிற வரையில், நாம் நம்முடைய வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். வாழ்வின் மையத்தைப் பிடிக்க, அதை நாம் அனுமதிக்கிற அந்த க்ஷணமே...., நம் வாழ்க்கையின் மற்றெல்லாவற்றையும், அது கைப்பற்றத் தொடங்கி விடும். 'நம்மிடம் எவ்வளவு இருக்கிறது' என்பது ஒரு விஷயமே இல்லை. ஆனால், 'நம்மிடம் உள்ளதை நாம் எங்கே வைக்கிறோம்' என்பதில் தான் விஷயத்தின் தீவிரம் அடங்கியிருக்கிறது.
உங்கள் வாழ்க்கையின் மையப்பகுதியில் என்ன இருக்கிறது?
உங்கள் வாழ்க்கையின் மையமாய் இருக்கும்படி, தேவன் தள்ளிக்கொண்டு நுழைய மாட்டார். நீங்கள் தான் அவரை அனுமதிக்க வேண்டும்!
ஜெபம்: கர்த்தாவே, உம்மைத் தவிர, வேறு எதுவும் என் வாழ்க்கையின் மையப்பகுதியில் நுழைய, நான் ஒரு போதும் அனுமதிக்காதிருப்பேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment