பலனும் பிரதிபலனும்
22 September 2020
B.A. Manakala
கிருபை உம்முடையது. ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர். சங். 62:12.
ஒரு முறை, நாங்கள் ஒரு டால்ஃபின் கண்காட்சியைக் கண்டுகளித்தோம். அந்த டால்ஃபின்கள் செயலாற்றின விதத்தைக் கண்டு, நாங்கள் அதிசயித்துப் போனோம். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பின்னர், அந்த டால்ஃபின்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்று, அவைகளுக்கு வெகுமானமாகக் கொடுக்கப்பட்டதை நாங்கள் கவனித்தோம்.
மனிதர்களாகிய நாம் வெகுமதிகளை விரும்புகிறோம். எனவே தான், வெகுமானங்களை நாம்... கொடுக்கிறோம்...; பெறுகிறோம்...; எதிர்பார்க்கிறோம். இவ்வுலகில் நாம் பெறுகிற வெகுமதிகள், தொடர்ந்து முன்னேறிச் செல்ல, பல்வேறு விதங்களில் நம்மை ஊக்குவிக்கின்றன. ஆனாலும், இப்பூவுலகில், எப்போதும் நாம் பலனை எதிர்பார்த்தோமேயானால், ஒருவேளை நாம் ஏமாந்து போகலாம். நித்திய ஆசீர்வாதங்களில் கவனம் செலுத்துங்கள். தேவன் உங்களை ஏமாற்ற மாட்டார். அவர் நீதியுள்ளவர் ஆகையால், மனுஷனுடைய துன்மார்க்கத்திற்கான பிரதிபலனும் கண்டிப்பாய் இருக்கும்.
இறுதிப் பலன் மீது பிரதான கவனம் செலுத்த, நீங்கள் என்ன செய்வீர்கள்?
நீங்கள் செய்கிற எல்லா செயல்களுக்கும், பலனோ, பிரதிபலனோ உண்டு; ஆனால் இரட்சிப்பு என்பது, நீங்கள் செய்கிற எந்த ஒரு செயலையும் அடிப்படையாகக் கொண்டதல்ல!
ஜெபம்: கர்த்தாவே, இவ்வுலகின் தற்காலிக வெகுமதிகளைக் காட்டிலும், இறுதி பலன் மேல் நோக்கமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment