உற்று நோக்குதல்

24 September 2020

B.A. Manakala

இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும், மகிமையையும் கண்டேன். சங். 63:2.

அன்றொரு நாள், அந்தி சாயும் வேளையில் நாங்கள் மொட்டைமாடியில் இருந்த போது, வானத்தில் ஒரு சில நட்சத்திரங்கள் இருந்தன. என் மகன் சுற்றி நடந்து கொண்டிருக்கையில், ஒரு நட்சத்திரத்தை உற்று நோக்கியவனாய் என்னிடம், "அப்பா, அந்த நட்சத்திரத்தைப் பாருங்கள்; நான் எங்கு போனாலும் அதுவும் என் கூடவே வருகிறது" என்று சொன்னான்.

தாவீது, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் கண்டு, அவருடைய வல்லமையையும், மகிமையையும் உற்று நோக்கினார் (சங். 63:2). இதுவே, எல்லா சூழ்நிலைகளிலும், ஒருவர் தொடர்ந்து பிழைப்பதற்கான, முக்கிய விசையாய் இருக்கிறது. இன்று நம்மில் சிலர், கொரோனா நோய்க்கிருமியையும், அதன் பின்விளைவுகளையுமோ..., அல்லது வேறு ஏதோ சில பிரச்சனைகளையோ... கூர்ந்துநோக்கிக் கொண்டிருக்கலாம்.

தேவனுடைய வல்லமையை நம்மால் கருத்தூன்றிப் பார்க்க முடிந்து விட்டால்.., பின்பு வேறெந்த ஒரு காரியத்தாலும் நாம் அசைக்கப்பட முடியாது! இயேசு கிறிஸ்துவின் மீது நம் கண்களைப் பதிக்கும்படி, இன்று நாம் ஊக்குவிக்கப்படுகிறோம் (எபி. 12:2).

தேவனின் படைப்புகள் எல்லாவற்றையும் நோக்கிப் பார்த்து, அவரை ஆராதியுங்கள்; தேவனையும், அவரது வல்லமையையும் உற்று நோக்குங்கள்!

ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்வின் எல்லா நாட்களிலும் உம்மையே உற்று நோக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

         (Translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்