தவறாத அன்பு
25 September 2020
B.A. Manakala
ஜீவனைப் பார்க்கிலும், உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். சங். 63:3.
லக்கி (Lucky) மற்றும் கோல்டுஸ்டார் (Goldstar) ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்ததின் விளைவாக உருவானதே எல்.ஜி. (LG) நிறுவனம் என்றாலும்கூட, எல்.ஜி. (LG) என்பதின் விரிவாக்கம் 'வாழ்க்கை நன்றாக இருக்கிறது' (Life's Good) என்று மக்கள் பலர் நினைக்கின்றனர். எப்படி இருந்தாலும், எல்.ஜி. தயாரிப்புகள் இன்று வாழ்க்கையை எளிதாக்குகின்றன.
தாவீது, வாழ்க்கையைக் காட்டிலும், இன்னும் சிறப்பான ஒன்றைப் பற்றி இங்கே குறிப்பிடுகின்றார். அது தேவனின் குறைவற்ற அன்பு (சங். 63:3). எல்லா நவீன வசதிகள் மற்றும் முன்னேற்றங்களுடன் வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாய் அனுபவிப்போம். ஆயினும், எது சிறந்தது, மதிப்புமிக்கது, நிரந்தரமானது என்பதை மறவாதிருப்போமாக.
அதே வேளையில்..., வாழ்க்கை நன்றாக இருக்கும் போது மட்டும் தான் தேவன் நல்லவர் என்று நினைக்காதேயுங்கள். அவருடைய தவறாத அன்பு, நம் வாழ்வின் கஷ்டங்களின் போதும் நம்மை நிலைநிறுத்துகிறது.
உங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், தேவனுடைய குறைவற்ற அன்பை, நீங்கள் எவ்விதம் தியானிப்பீர்கள்?
பூமிக்குரிய நல்ல வாழ்க்கைக்கு..., நாளைய தினத்துக்கான எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது..., தேவனின் தவறாத அன்புக்கு உண்டு!
ஜெபம்: கர்த்தாவே, என்னுடைய நல்ல வாழ்க்கையைக் காட்டிலும், உம்முடைய மாறாத அன்பின் மீது அதிக கவனம் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment