என் ஜீவனுள்ளமட்டும்
26 September 2020
B.A. Manakala
என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன். சங். 63:4.
நண்பர்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுக்கையில், "என் ஆயுசுக்கும் உன்னை நான் மறக்க மாட்டேன்" என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். இத்தகைய வாக்குறுதிகள் எவ்வளவு காலத்திற்கு உண்மையாக இருக்குமோ... என்று நான் வியக்கிறேன்.
தாவீது தன் ஜீவனுள்ளமட்டும் தேவனைத் துதிக்க தீர்மானிக்கிறார் (சங். 63:4). நாம் உயிரோடிருக்கும் வரைக்கும்.... சாப்பிடுவது, தூங்குவது... போன்ற பல விஷயங்களை, அவற்றைப் பற்றின எந்த ஒரு முடிவும் எடுக்காமலே கூட நாம் செய்வோம். அதோடுகூட..., இன்னும் பல்வேறு காரியங்களை அன்றாடம், வழக்கமாய்ச் செய்வதற்கும், நாம் முடிவு செய்கிறோம்.
நாம் தேவனை எப்பொழுதும் துதிப்பதற்குத் தீர்மானிப்போமென்றால், தாவீதைப் போலவே, நாமும் கூட, நம் ஜீவனுள்ள நாளெல்லாம்... நன்மையும், கிருபையும் நம்மைத் தொடரும் என்கிற நிச்சயத்தோடு இருப்போம் (சங். 23:6).
உங்கள் ஜீவனுள்ளமட்டும், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
உங்கள் ஜீவனுள்ளமட்டும், நீங்கள் செய்யும் ஒரே ஒரு விஷயம் இருக்குமென்றால்....., அது தேவனைத் துதிப்பதாய் இருக்கட்டும்!
ஜெபம்: கர்த்தாவே, நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உம்மைத் துதித்துக் கொண்டே இருப்பதற்கு, என்னைப் பழக்குவியும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment