மெய்யான திருப்தி

27 September 2020

B.A. Manakala

நிணத்தையும், கொழுப்பையும் உண்டது போல என் ஆத்துமா திருப்தியாகும்என் வாய் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். சங். 63:5.

ஒரு பிச்சைக்காரர் என்னிடம் வந்தார். நான் அவர் மீது இரக்கப்பட்டு, அவரைக் குளிக்க வைத்து, வேறு ஆடை அணிவித்து, ஒரு கேளிக்கைப் பூங்காவிற்கு அவரை அழைத்துச் சென்றேன். ஆனாலும்..... இன்னும் அவர் உற்சாகமற்று, இருண்டு போய் இருந்ததை நான் கண்டேன். அந்த நாளின் இறுதியில், அவர் என்னிடம், "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்று கேட்டார். அவர் உணவை உட்கொண்ட பிறகு தான், அவருடைய முகம் பிரகாசமாக மாறியது.

உலகில் உள்ள மிகச் சிறந்த ராஜபோக உணவு கூட, உங்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் போகக்கூடும். தாவீது, தேவனிடமிருந்து திருப்தியை அனுபவிக்கிறார் (சங் 63:5). நம்மை மெய்யாகவே திருப்திப்படுத்துகிறது எது என்பதை நாம் அடையாளம் காணாவிட்டால், நம்முடைய ஏராளமான நேரத்தையும், ஆற்றலையும் நாம் வீணடித்துக் கொண்டிருப்போம்.

உணவு, உடை, உறைவிடம், உடைமைகள், உடல் ஆரோக்கியம் உட்பட ...., இவ்வுலகில் நமக்கு இருக்கிற அனைத்துமே, தேவனால் அருளப்பட்டவை. ஆயினும்...., அவைகள் க்ஷணப் பொழுது மாத்திரமே நம்மை திருப்திப்படுத்த முடியும்.

இயேசுவை ஏற்ற பிறகும்கூட..., உங்களுக்கு வாழ்வில் அதிருப்தி நிலவுகிறதா? அதற்கான காரணத்தை, நீங்கள் எங்ஙனம் அடையாளம் காண்பீர்கள்?

உங்களால் முடிந்த எல்லாவற்றையும் கொண்டு, உங்களை நீங்களே திருப்திப்படுத்த முயற்சிக்கும் முன்னர்..., அதிருப்திக்கான மூல காரணத்தை அடையாளம் காணுங்கள்!

ஜெபம்: கர்த்தாவே, தயவுகூர்ந்து, ஒவ்வொரு நாளும், உம்முடைய பிரசன்னத்தால்  என்னை திருப்தியாக்கும். ஆமென்!

 

         (Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்