பற்றிக்கொள்ளல்
28 September 2020
B.A. Manakala
என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது. உமது வலது கரம் என்னைத் தாங்குகிறது. சங். 63:8.
70 பேரின் உயிரைக் காவு வாங்கிய பெட்டிமுடி நிலச்சரிவுக்குப் பின்னர்...., "கூவி" என்ற நாய் ஒன்று, தொடர்ந்து பல நாட்களாக, ஆற்றங்கரை ஓரத்திலேயே காத்துக்கிடந்தது. காவல்துறையினர் வந்து அங்கே தேடி, அந்த நாய் காத்துக்கிடந்த இடத்திலிருந்து அதன் எஜமானருடைய சடலத்தைக் கண்டெடுத்தனர்! கடைசியாக..., "கூவி" அந்த காவலர்களுள் ஒருவரால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டது.
தாவீது, அவரைப் பாதுகாப்பாய்த் தாங்கிப் பிடித்திருந்த தேவனைப் பற்றிக்கொண்டார் (சங் 63:8). இந்த உலகம், நாம் பற்றிக்கொள்ளத்தக்க ஏராளமான விஷயங்களை நமக்கு வழங்குகிறது. இப்பூமியில் வாழ்கிறதால், நாம் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் மனிதர்களுடன் உறவையும், நெருக்கத்தையும் வளர்த்துக் கொள்கிறோம். ஆனாலும், அவற்றுள் ஏதாவது ஒன்றை நாம் பற்றிக்கொள்வோமேயானால்..., ஒரு நாளில் நாம் ஏமாற்றமடையக் கூடும். நாம் என்றென்றும் சேர்ந்து வாழக்கூடிய ஒருவருடன் பற்றுதலாய் இருங்கள்!
நீங்கள் பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்களோ... அல்லது நபர்களோ... உண்டா?
பூமியிலுள்ள பொருட்களுடனும், மனிதர்களுடனும் நன்றாக இணைந்திருங்கள். ஆயினும்...., நித்தியமானதை மட்டுமே பற்றிக்கொள்ளுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் உம்மையே பற்றிக் கொள்வதற்கு என்னை வழிநடத்தும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment