சதித்திட்டங்கள்
B.A. Manakala
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். சங். 63:9.
பிரதமரைக் கொலை செய்யப் போவதாக, மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட ஒரு மின்னஞ்சலை, 2020 ஆகஸ்ட் 8ம் தேதி 'தேசியப் புலனாய்வுத் துறை' பெற்றது. இதுபோன்ற மிரட்டல்களைப் பெறுவது வழக்கமான நடைமுறையாய் இருக்கக் கூடும். இப்படிப்பட்ட மிரட்டல்கள் இருந்தாலும் கூட..., தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, அலுவலகங்களின் செயல்பாடுகள் சகஜமான முறையில், தொடர்ந்து நடைபெறுகின்றன.
தனக்கு எதிராக சதி செய்கிறவர்கள் யாரானாலும், அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று தாவீது நிச்சயமாய் நம்புகிறார் (சங். 63:9,10). வாழ்வில் முன்னேறிச் செல்வதற்கு, நமக்கும் இந்த உறுதி அவசியம்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக, சாத்தான் தொடர்ந்து சதி செய்கிறான். ஆனாலும், நாம் தொடர்ந்து தேவன் மீது கவனத்தைச் செலுத்தி, நம் இலக்குகளை அடைய வேண்டும். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொண்டு, நாம் தொடர்ந்து முன் செல்ல வேண்டும் (எபே. 6:13).
சாத்தானின் சதித்திட்டங்களைக் குறித்த பயத்திலிருந்து விடுபடுவதற்கு, நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்கள் வளங்களை இராஜ்ய வேலைக்காக முதலீடு செய்யுங்கள். உங்கள் சத்துருவுக்கு விரோதமாய், சதித்திட்டங்களைத் தீட்டுவதற்காக அவற்றை வீணடிக்காதீர்கள்!
ஜெபம்: கர்த்தாவே, என் சத்துருவின் சதிகள் மீதல்ல..., உம் மீது என் கவனத்தை செலுத்துவதற்கு, எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment