சிசிடிவி!
30 September 2020
B.A. Manakala
ராஜாவோ தேவனில் களிகூருவார். அவர்பேரில் சத்தியம் பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். சங். 63:11.
ஒருமுறை, ஒரு உணவகத்திலே, ஓர் பெண்மணி உணவருந்திக் கொண்டிருந்தாள். சாப்பாட்டின் இடையே, அவளது உணவிலிருந்து உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை அவள் எடுத்தாள். கத்திக் கூச்சலிட்டு, சுற்றி இருந்த எல்லா வாடிக்கையாளர்களின் கவனத்தையும் அவள் ஈர்த்தாள். அந்த உணவக அதிகாரிகள் அவளிடம் வந்து மன்னிப்புக் கேட்டனர். பின்பதாக..., சிசிடிவி கண்காணிப்புக் கேமராவின் காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது தான்... அவள் தானே அந்த கண்ணாடித் துண்டை உணவில் வைத்த குட்டு வெளிப்பட்டது!
சத்தியத்திற்காக நிற்பதன் வாயிலாக, நாம் தேவனைத் துதிக்கிறோம். ஆனால், பொய்யரோ மவுனமாக்கப்படுவர் (சங். 63:11). பெரும்பாலும்.., பொய்யர்கள் செழிப்பது போலத் தோன்றலாம். ஆனால்.., அவர்களால் நீண்ட தூரம் வரை செல்ல முடியாது. யூதேயா தேச ஆளுநரின் வழக்கப்படி, பிலாத்து.., " நீங்கள் யார் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்... பரபாஸா... (மிகக் கொடிய சிறைக்கைதி)..? அல்லது இயேசுவா...?" என்று கேட்டான். அந்த ஜனத்திரளோ..., பரபாசே விடுவிக்கப்பட வேண்டும் என்றும், தாமே 'சத்தியமாய்' இருக்கிற இயேசுவோ... (யோவா. 14:6) சிலுவையில் அறையப்பட வேண்டும் என்றும் விரும்பினது. இறுதியில்... சத்தியமே மேலோங்கி நின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். "சிசிடிவி" எல்லா இடங்களிலும் இருக்கிறது என்பதையும், அது நம்முடைய ஆழ்மனதின் எண்ணங்களையும் கூட காணக் கூடியது... என்கிற உண்மையையும் நாம் மறந்துவிடாதிருப்போமாக!
எப்போதும் உண்மையே பேசுவதற்கு, உங்களால் தேவனை நம்ப முடிகிறதா?
'மெய்' மற்றும் 'பொய்' என்பதற்கான உங்கள் வரையறைகள் சரியாக இருக்க வேண்டும் என்றால்..., அவற்றை தேவனும், மற்றவர்களும் அங்கீகரிக்க வேண்டும்!
ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் உண்மையே பேசுகிறதன் மூலமாக, உம்மை நான் துதிக்கவும், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் தக்கதாக எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment