அதை பலமுறை கேளுங்கள்

21 September 2020

B.A. Manakala

தேவன் ஒருதரம் விளம்பினார்; இரண்டுதரம் கேட்டிருக்கிறேன். வல்லமை தேவனுடையது என்பதே. சங். 62:11.

எங்கள் இளம் வயதிலே, நாங்கள் எங்கள் அம்மாவோடு சண்டை போடுவது வழக்கம். சில சமயங்களில், அவர்கள் மிகவும் கோபப்படுகையில், 'நீங்கள் என்னைப் பார்க்கிறதற்கு ஏங்குவீர்கள்' என்று சொல்வார்கள். 1995ம் ஆண்டிலேயே அவர்கள் காலமாகி விட்டாலும்..., அவர்களுடைய வார்த்தைகள் மட்டும், இன்று வரையிலும் என் காதுகளில் அடிக்கடி தொனித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

இன்று நாம் வாழ்கிற கூச்சலும் குழப்பமும் நிறைந்த இவ்வுலகிலே.., நாம் விரும்புகிறதைக் கேட்கவும், பார்க்கவும் ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றை, நாம் விரும்புகிற அளவுக்கு தியானிக்கவும் செய்கிறோம்.

நாம் நம்முடைய உள்ளான மனிதனை பலப்படுத்த விரும்பினால்..., எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்கடி, தேவனுடைய சத்தம் நம் காதுகளில் எதிரொலிக்க, நாம் அனுமதிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையில் இரவும் பகலும் தியானமாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (சங். 1:2).

நாள் முழுவதும் தியானிப்பதற்காக, நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறவையும், பார்க்கிறவையும், படிப்படியாக உங்கள் வாழ்க்கையையே மாற்றி விடும்!

ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னவெல்லாம் பேசுகிறீரோ, அவற்றையே நான் மீண்டும் மீண்டும் கேட்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

 

         (Translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்