ஆரவாரத்தோடு துதியுங்கள்!
B.A. Manakala
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். சங். 66:1.
எங்களுடைய ஒரு வயது மகள் இன்னும் பேசவில்லை. ஆயினும், அவள் பசியாகவோ, தூக்கக் கலக்கத்தோடோ, கோபமாகவோ, மகிழ்ச்சியாகவோ... இருக்கும் போது, அந்த உணர்ச்சிகளை எப்படியாவது அவள் வெளிப்படுத்தி விடுகிறாள். சில சமயங்களில், இரவில் மிகுந்த சத்தமாக அவள் அழுவதால், மறுநாள் காலையில் அயலகத்தார் அது பற்றி எங்களிடம் விசாரிப்பதுண்டு.
துதிக்கும் போது நம்முடைய குரலை உயர்த்த வேண்டும் என்று மெய்யாகவே தேவன் விரும்புகிறாரா? எந்தெந்த வழியெல்லாம் சாத்தியமோ, அப்படியெல்லாம் நம் துதியை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அது சத்தமாகவோ, மௌனமாகவோ, அழுதோ, நகைத்தோ, பாடியோ, வார்த்தைகளாலோ - இது போன்ற வேறெந்த விதங்களிலோ இருக்கலாம். நம்முடைய வாழ்க்கை முழுமையும்... சொல்லாலும், செயலாலும்... அவரையும் அவர் புகழையும் பறைசாற்ற வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். தனி நபர்களாய், குடும்பங்களாய், சபைகளாய்.... நம்மை உண்மையான இறை வழிபாட்டாளர்களாக...., நம் அயலகத்தாரும், சுற்றியுள்ள பிற ஜனங்களும் காண முடிய வேண்டும்.
தேவனை ஆராதிக்கிறதில், நீங்கள் எவ்வளவு ஆரவாரத்துடன் (ஒலி அளவில் மட்டுமல்ல) இருக்கிறீர்கள்?
சொல்லாலும், செயலாலும், தேவனைத் துதிப்பதில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஆர்ப்பரியுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்நாளெல்லாம், உம்மைத் துதிப்பதில் கெம்பீர தொனியாய் முழங்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment