எவ்வளவு மகிமை!

B.A. Manakala

அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். சங். 66:2.

மிதக்கும் பனிப்பாறை என்பது, மாலுமிகள் மிகவும் கவனமாக இருக்கும் ஒரு விஷயம். ஏனென்றால்..., பொதுவாகவே, அப்பாறையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேலே தெரியும். வேறு விதமாகக் கூறின், மிதக்கும் ஒரு பனிப்பாறையின் உண்மையான அளவைக் குறித்ததான அவர்கள் கணிப்பு மிகவும் தவறாக இருக்கலாம்.

'தேவன் எவ்வளவு மகத்துவமானவர்' என்பதை ஒருபோதும் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.... என்பதை, சிருஷ்டிக்கப்பட்ட படைப்புகளாக.., நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். 'தேவன் யார் என்பது எனக்குத் தெரியும்' என்று சிந்திப்பதன் மூலம், நாம் தேவனை வரம்புக்குட்படுத்துகிறோம். தேவனின் எல்லைகளை மனித பாஷையாலும், மூளையாலும் விவரிக்க முடியாது. 'தேவன் யார்' என்பது பற்றி உங்களுக்கு சின்னஞ்சிறியதோர் கண்ணோட்டம் இருக்குமேயானால்...., பிறருக்கு அதைப் பற்றிக் கூறுவதை உங்களால் நிறுத்த முடியாது.

தேவன் எவ்வளவு மகிமையானவர் என்பதை அறிந்து கொள்ள, நீங்கள் எந்த அளவுக்கு ஆர்வமாய் இருக்கிறீர்கள்?

தேவன் யார் என்பது பற்றின மிகச் சிறியதோர் கண்ணோட்டத்தை நீங்கள் பெற்றால், தேவனைத் துதிப்பதை உங்களால் நிறுத்த முடியாது. ஆனால் உங்களை நீங்களே புகழ்வதை நிறுத்தி விடுவீர்கள்.

ஜெபம்: கர்த்தாவே, உமது மகிமையில்... குறைந்தபட்சம் சிறிதளவாவது தினமும் எனக்குக் காண்பியும். ஆமென்!

 

         (Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்