பூமியிலுள்ளவை யாவும்

B.A. Manakala

பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு, உம்மைத் துதித்துப் பாடுவார்கள். அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். சங். 66:4.

"என்னைத் திருப்பிக் கடிக்காத எல்லாவற்றையும் நான் சாப்பிடுகிறேன்" என்று யாரோ ஒருவர் கூற, நான் கேட்டிருக்கிறேன். இதன் மூலம் அவர், 'தனக்கு சாப்பிடுகிறதில் எந்த விருப்பத்தேர்வுகளும் இல்லை' என்று கூற முயல்கிறார். ஆனாலும்...., சாப்பாட்டு மேஜை மீது வைக்கப்படுகிறவற்றில் சில முன்னுரிமைகளை அவர் வைத்திருக்கிறதை நான் கவனித்தேன்.

தேவனை தொழுதுகொள்ளுவதில் இருந்து எதற்குமே விலக்கு அளிக்கப்பட முடியாது. "யாவும்" என்பது.... தேவனின் படைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியது...., உயிரற்றவையும் கூட தான். அவை யாவும்.., அவருக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அடங்கி இருக்கிறது. வேதத்திலே, இதற்கு உதாரணங்களாக... கடல், நிலம், தாவரங்கள், புழுக்கள், மீன், காற்று.... இவை போன்றவை, தேவனுக்குக் கீழ்ப்படிகிறதை நாம் காண்கிறோம்! மனிதனுக்கு, தன் சுய விருப்பத்தின் படி தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பதால், அவன் மட்டும் கீழ்ப்படியாமையைத் தேர்ந்தெடுக்கிறான். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே மேலானது. வேறு விதமாகக் கூறின், கீழ்ப்படிதல் அற்ற ஆராதனை அர்த்தமற்றது.

பிற படைப்புகளைப் போலவே உங்களால் தேவனை ஆராதிக்க முடிகிறதா?

நம் வார்த்தைகளால் மாத்திரம் தேவனை ஆராதிப்பது அர்த்தமற்றது. நம் வாழ்க்கையால் அதைச் செய்ய வேண்டும்!

ஜெபம்: கர்த்தாவே, மற்ற எல்லா படைப்புகளையும் போலவே... நானும், என்னை முழுமையாய் உமக்கு சமர்ப்பிக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

         (Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்