தேவனின் அற்புதங்கள்
B.A. Manakala
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார். ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள். அங்கே அவரில் களிகூர்ந்தோம். சங். 66:6.
நான் ஒரு சுத்தியலை எடுத்து, தரையிலே மெதுவாக அடிக்கத் தொடங்கினேன். பின்னர், அவ்வாறு தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் போதே..., என் இடது கையை அதற்குக் கீழே... முன்னும் பின்னுமாக ஆட்டினேன். அப்படியே...நான் வேகத்தை நொடிக்கு மூன்று முறை... என்கிற அளவுக்கு அதிகரித்தேன். என் குழந்தைகள் வாயடைத்துப் போயினர்!
நாம் தேவனுடைய அற்புதங்களைக் குறித்து, ஆச்சரியப்பட்டுப் போகிறோம். ஆனாலும், அப்படிப்பட்ட அற்புதங்கள் வாயிலாக, தேவனுடைய வல்லமை முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இயேசுவும், பேதுருவும் தண்ணீர் மேல் நடந்தது போலவே, தேவன், இஸ்ரவேலரையும் கடலின் மேல் நடக்கப் பண்ணியிருக்கலாம். பிலிப்புவுக்குச் செய்தது போலவே, இவர்களையும் அக்கரைக்குப் பறந்து போகச் செய்திருக்கலாம். கோராகுக்கும் அவன் கூட்டத்தாருக்கும் செய்ததைப் போலவே, அக்கினியாலோ.., அல்லது பூமியைப் பிளக்கப் பண்ணியோ, எகிப்தியரை அவர் கொன்றிருக்கலாம். அற்புதங்கள் தேவனுடைய வல்லமையைப் பற்றின கணநேரக் கண்ணோட்டத்தை மட்டுமே நமக்குத் தந்து..., அவரை விசுவாசிக்க நமக்கு உதவி செய்கிறது. நாம் நம்புகிறோமோ இல்லையோ..., தேவனால் எதையும் செய்ய முடியும்!
தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரக்கூடிய...., தேவனின் அசாதாரண அற்புதங்களை வாஞ்சித்து, அதற்காய் ஜெபிக்க, உங்களுக்கு தைரியம் உண்டா?
'தேவன் வெறும் அதிசயம் நிகழ்த்துபவர்' என்று நினைக்காதீர்கள்; அவர் தேவன்.
ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய அற்புதங்கள் மீதல்ல...., உம் மீதே என் கவனத்தை செலுத்த, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment