ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்

B.A. Manakala

அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்.  அவருடைய கண்கள் ஜாதிகள் மேல் நோக்கமாயிருக்கிறது. துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. சங். 66:7.

பெற்றோராக  நாங்கள்எங்கள் குட்டி மகளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பதாக  நினைக்கிறோம். ஆனால் அவளோ....  அலமாரிக்குள்ளே உட்கார்ந்து கொள்வது, கோப்பைகளை உடைப்பது, சுவற்றில் வரைவது  போன்று... அவள் செய்கிற சில காரியங்களால், எங்களைத் திகைக்க வைக்கிறாள்.

ஜாதிகளின் ஒவ்வொரு அசைவையும் தேவன் உன்னிப்பாய் கவனிக்கிறார் (சங். 66:7). சபை, குடும்பம், தனி நபர்கள், உயிரினங்கள், கிரகங்கள், ... இன்னும் மீதமுள்ளவை... அனைத்தின் ஒவ்வொரு நகர்வையும், தேவன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். முழு சிருஷ்டிப்பின் ஒவ்வொரு அசைவையும் அவர் கண்காணிக்கிறார்.  நாடுகள் வெவ்வேறு திட்டங்களை வகுக்கின்றன..... சில சமயம் கட்டுவதற்கு...; பல சமயங்கள் அழிப்பதற்கு....; சில வேளைகளில்.., தேவன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வே கூட இல்லாமல்!

உங்கள் வாழ்வின் எந்த சந்தர்ப்பங்களில், 'தேவன் கவனிக்கிறார்' என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்?

முழு சிருஷ்டிப்பின் கண்காணிப்பாளராய் தேவன் பிரமாதமானதோர் வேலை செய்கிறார்!

ஜெபம்: கர்த்தாவே, 'நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீர்' என்பதை அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தியருளும். ஆமென்!

 

         (Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்