வாழ்க்கை அவர் கரத்தில்
B.A. Manakala
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாட வொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். சங். 66:9.
நான் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, சில வேளைகளில்... என்னுடைய சிறு குழந்தைகள், ஓட்டுநர் இருக்கைக்கு வர விரும்புகிறார்கள். வண்டி ஓடிக் கொண்டிருக்கையில், 'திசை மாற்றும் சக்கரத்தை' அவர்களிடம் கொடுக்க வேண்டுமெனில்.... நான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். அதனால், வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கும் போதே... அவர்கள் பெரும்பாலும் தங்களை திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.
நாம் தவறாகக் கையாள்வதாலோ.... அல்லது, 'எப்படிக் கையாள வேண்டும்' என்றே தெரியாத நம் நண்பர்கள் மற்றும் அடுத்தவர்களின் கைகளில் நாம் கொடுப்பதாலோ.... நம் வாழ்க்கை, பெரும்பாலும்.... அபாய கட்டத்தில் இருக்கிறது.
நினைவிருக்கட்டும்...... உங்கள் குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் இன்னும் இது போன்ற பலருடைய வாழ்க்கை.... உங்கள் கைகளிலும் கூட இருக்கலாம். இறுதியில்... அவர்களும் தங்களுடைய வாழ்க்கையை சர்வ வல்லவருடைய கரங்களில் ஒப்புவிக்கத்தக்கதாக...., அவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் ஜாக்கிரதையாகக் கையாளுவதில்... தேவனை நம்பி, உங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்யுங்கள்.
ஒரு தடவை தாவீது, "மனுஷருடைய கைகளில் விழுவதைப் பார்க்கிலும், கர்த்தருடைய கையிலே விழுகிறதே மேல்" என்று கூறினார் (2 சாமு. 24:14).
உங்கள் வாழ்க்கையை நன்கு கையாளத் தெரிந்த ஒருவரின் கரங்களிலே..., அதை முழுமையாகக் கொடுக்க... நீங்கள் விரும்புகிறீர்களா?
நித்தியம் வரைக்கும் கையாளத் தெரிந்த..., மிகவும் பாதுகாப்பான கரங்களில், உங்கள் வாழ்க்கையைக் கொடுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, நான் என் வாழ்க்கையை முழுவதுமாக உமது கரங்களில் கொடுக்கிறேன். அதை வைத்து நீர் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீரோ..., தயவு கூர்ந்து அதைச் செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment