சோதிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படல்
B.A. Manakala
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறது போல எங்களைப் புடமிட்டீர். சங். 66:10.
இப்போது, கோவிட்-19 க்கான தடுப்பூசி, பல நாடுகளாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்..., அவை எதுவுமே, போதுமான அளவு சோதனை செய்யப்பட்டு, இன்னும் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை!
நீங்கள் சுத்திகரிக்கப்பட்டவர்கள் என்று நிரூபிக்கப்படத் தக்கதாக, அடிமைத்தனம், நெருப்பு, மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் மூலம் நீங்கள் சோதிக்கப்பட்டு, புடமிடப்படுகிறீர்கள் (சங். 66:10-12). ஆயினும், நினைவில் கொள்ளுங்கள்.... கடைசியாக, மிகுந்த செழிப்பு இருக்கிறது (வச. 12). நாம் அனைவருமே... இறுதி தயாரிப்பை விரும்புகிறோம். ஆனால்..., இடையே உள்ள செயல்முறையை அவ்வளவாக விரும்புவதில்லை.
"இக்காலத்துப் பாடுகள், இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல" என்று ரோமர் 8:18 கூறுகிறது.
உங்களைப் பாடுகளிலிருந்து விலக்கிக் காக்கும்படி தேவனிடம் கேட்க விரும்புகிறீர்களா அல்லது பாடுகளின் வழியாகக் கடந்து செல்வதற்கு, அவருடைய கிருபையைக் கேட்க விரும்புகிறீர்களா?
சோதனை எந்த அளவுக்கு மிகக் கடினமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வெளிவரும் உற்பத்திப் பொருளும், மிகச் சிறந்ததாக இருக்கும்!
ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்க்கைக்கான உம்முடைய திட்டத்தின்படி ஜெபிக்க, எனக்கு உம் கிருபையைத் தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment