நமது காணிக்கை
B.A. Manakala
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்.... என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். சங். 66:13,14.
என்னுடைய ஒரு பிறந்தநாளின் போது, என் சிறு மகன் என்னிடத்தில் வந்து, "அப்பா, நான் உங்களுக்கு சிறப்பான ஒரு அன்பளிப்பு வைத்திருக்கிறேன்" என்று கூறியபடி, கிழித்து..., மடிக்கப்பட்டிருந்த... ஓர் காகிதத் துண்டை என்னிடம் அளித்தான். இன்று, அவனுடைய அன்பளிப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதில் அவன் எழுதியிருந்த... "அப்பா, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்" ... என்ற செய்தியை என்னால் மறக்க முடியாது.
ஒரு வேளை, நம்மில் சிலர் தேவனுக்கு... பல பொருள்களைக் கொடுத்திருக்கலாம். தேவனுக்குப் பண்ணின பொருத்தனைகளை நிறைவேற்ற வேண்டியது முக்கியம் (சங் 66:14). ஆயினும், அது அன்போடு செய்யப்பட வேண்டியது அதை விட முக்கியம். காணிக்கையின் தரத்தையும், தரும் அளவையும் விட தருபவரின் மனப்பான்மை மிகவும் முக்கியம். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் மட்டுமே தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரி. 9:7). தேவனுக்கு நாம் அளிக்கிற காணிக்கையைப் பற்றி சிந்தித்து, நம் அணுகுமுறையில் அதை பிரதிபலிக்க வேண்டும்.
நமது காணிக்கைகளில், தேவனுக்கு நாம் என்ன செய்தியை அனுப்புகிறோம்?
மிகச் சிறந்ததை தேவனுக்குப் படையுங்கள்..; அதை மனக்கசப்போடு படைக்காதீர்கள்!
ஜெபம்: கர்த்தாவே, அன்போடு கொடுக்க, எப்போதும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment