மிகச் சிறந்ததைக் கொடுங்கள்
B.A. Manakala
ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே, கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன். காளைகளையும், செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். சங். 66:15.
ஒருமுறை, ஒரு மனிதர் ஜெபக்கூட்டம் ஒன்றில் பங்குபெற்றார். காணிக்கை சேகரிக்கும் நேரம் வந்தபோது, கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லாததால், அவர் மிகவும் வருந்தினார். கடைசியில் அவர், தன் கையில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி, காணிக்கைப் பெட்டியில் போட்டுவிட்டார்.
எதையுமே கொடுக்கும்படிச் சொல்லி, தேவன் ஒருபோதும் நம்மைக் கட்டாயப்படுத்தவே மாட்டார்.... சிறந்த காணிக்கையைப் பற்றி மறந்து விடுங்கள். யாருமே, எதையும்... தேவனுக்கு நேரடியாக வழங்க முடியாது.... என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும்..., அவை மக்கள் வழியாகவே அனுப்பப்படுகிறது. அதனால்...., சரியான மனப்பான்மையுடன் காணிக்கைகளைக் கொடுக்கவும், பெறவும் மனமுவந்தவர்களாய் இருங்கள். உங்களுக்கு அளிக்கப்படுகிற அனைத்தையுமே வாங்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கு 'இனிமேல் தேவையில்லை' என்கிற பொருட்களை மட்டுமே கொடுக்காதீர்கள். தேவனுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ.... ஏதாவதொன்றை நாம் கொடுக்கும் முன், தேவன் நமக்கு அளித்த நன்மைகளைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் உதவியாக இருக்கலாம்.
உங்களுடைய காணிக்கை மற்றும் அன்பளிப்புகளின் தரத்தையும், அளவையும் நீங்கள் எவ்வாறு வரையறுக்கிறீர்கள்?
தேவனுக்கோ, மனிதனுக்கோ.... அன்பளிப்புகளை நாம் வாங்கும்போது..., நமக்கு நாம் எதை வாங்குவோமோ..., அதைவிடச் சிறந்த தரத்தில் எப்போதுமே தேர்வு செய்வோமாக!
ஜெபம்: கர்த்தாவே, உமக்கும், பிறருக்கும் சரியான மனப்பான்மையுடன் கொடுப்பதற்கு எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment