பிறரிடம் சொல்லுங்கள்
B.A. Manakala
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். சங். 66:16.
நான் உரையாடுகிற போதெல்லாம், என் கவனத்தை தேவன் பக்கமாய்த் திருப்புகிற ஒருவரை நான் அறிவேன். அதனால் அவரோடு சம்பாஷிப்பதை நான் விரும்புகிறேன்.
பிறரோடு பேசாமலும், இருதயத்தில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளாமலும், மனிதர்களாகிய நம்மால் வாழ முடியாது. ஆதியில் இருந்தே அவ்விதமாகத் தான் தேவன் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால்...., நாம் எதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமான ஒரு கேள்வி ஆகும்.
நாம் பிறரிடம் வார்த்தைகளால் மட்டுமே பேசுகிறோம் என்று நினைக்காதீர்கள். நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம்... நம் வாழ்க்கையின் மூலம், நாம் எப்போதுமே பேசிக் கொண்டே இருக்கிறோம்!
இங்கே சங்கீதக்காரர், 'தேவன் எனக்கு என்ன செய்தார் என்பதை உங்களுக்குச் சொல்லுவேன்' என்று கூறுகிறார் (சங். 66:16). பிறரிடம் தேவனைப் பற்றிக் கூறுவது நம்முடைய வாழ்நாள் பணி ஆகும். உங்களுடைய பேச்சிலே.... கிருபை பொருந்தினவர்களாயும், வசீகரிக்கிறவர்களாயும் இருங்கள் (கொலோ. 4:6).
உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம்.... பிறரிடம் என்ன கூறுகிறீர்கள்?
நாம் எப்போதும், நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு.... ஏதாவதொரு செய்தியைக் கடத்திக் கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கு நன்மை பயப்பவற்றை மட்டுமே கடத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை இன்னும் அதிகமாய்ப் பிரதிபலிக்கத்தக்கதாக..., நீர் என்னில் பெருகுவீராக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment