ஜெபத்தில் துதி
B.A. Manakala
அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன். என் நாவினால் அவர் புகழப்பட்டார். சங். 66:17.
சமீபத்தில்.... எங்கள் குடும்பத்தில், நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து, மற்ற ஒவ்வொரு நபரிடமும் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று தீர்மானித்தோம். இது எங்களுடைய குடும்பத்திலே, பலம் மிக்க ஓர் பந்தத்தை உருவாக்கியது.
பெரும்பாலும்.... நாம் மற்றவர்களிடம் உள்ள நல்லதை விட..., குறையைக் கண்டுபிடிக்கிறதிலே, கைதேர்ந்தவர்கள். ஏதோ ஒரு வகையிலே... இந்த மனப்பான்மை, நமக்கு தேவனோடு உள்ள உறவிலேயும் பிரதிபலிக்கிறது. பொதுவாக, நாம் தேவனை, வெறும்.... கொடுப்பவராகவே நினைக்கிறோம். குறைந்தபட்சம்..., நாம் ஜெபிக்கிற வேளைகளிலாவது, நாம் அவரைத் துதிக்கிறதை, அவர் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். சங்கீதக்காரர், ஜெபத்திலே, துதியையும் சேர்த்துக் கொள்கிறார் (சங். 66:17). துதிப்பதற்கு, தேவன் மிகவும் தகுதியானவர் (சங். 145:1). சாத்தியமான வேளைகளில் எல்லாம்...., நாம் தேவனையும், மற்றவர்களையும், புகழக் கற்றுக்கொள்வது நல்லது. நாம் தகுதியானவர்களாய் இருக்கையில், பிறர் நம்மைப் புகழ்ந்து பேசாவிட்டாலும் கூட, நாம் முன்னேறிச் செல்ல கற்றுக் கொள்வோமேயானால்...., அது மிகவும் சிறந்தது.
நீங்கள் மற்றவர்களால் புகழப்படும் போது, எப்படி உணர்கிறீர்கள்? அடிக்கடி தேவனைத் துதிப்பதற்கு, நீங்கள்... எந்த ஒரு அடியை எடுத்து வைப்பீர்கள்?
நம்முடைய ஜெபங்களில், நாம் எவ்வளவாய் துதியைச் சேர்க்கிறோமோ, அவ்வளவு பலம் மிக்கதாய், தேவனோடுள்ள நம் பிணைப்பு மாறும்!
ஜெபம்: கர்த்தாவே, கடினமாய் இருக்கும் போதும் கூட..., எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அடிக்கடி உம்மைத் துதிக்க, எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment