இருதயத்தில் பாவம்
B.A. Manakala
என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். சங். 66:18.
மேற்காணும் படத்தில் உள்ளது 'துரியன் பழம்' ஆகும். இது வெளியில் இருந்து பார்ப்பதற்குக் கூர்மையாய், அருவருக்கத்தக்க தோற்றத்தோடு இருக்கிறது. ஆனால்... உள்ளிருக்கும் பழம்..., அழகாகவும், ருசியாகவும் இருக்கும். பார்க்க அழகாக இல்லாவிட்டாலும், மக்கள் இதை வாங்குவதற்குக் காரணம், உள்ளே இது ருசியாக இருப்பதால் தான்.
நாம் ஜனங்களைப் பார்க்கையில், வெளியே என்ன இருக்கிறதோ, அதை மட்டுமே நாம் பார்க்கக் கூடும். ஒருவேளை, அது உண்மை நிலையாய் இல்லாதிருக்கலாம். சிலர், வெளியே நன்றாகத் தோற்றமளிப்பர். சிலரோ... வெளியே பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாய் இல்லாதிருக்கலாம். மற்ற ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் என்ன இருக்கிறது... என்பதைப் படித்தறியக் கூடிய பகுத்தறிதல்.... நம்மில் எல்லாருக்கும் இருப்பதில்லை.
முரண்பட்ட விஷயம் என்னவென்றால், சில சமயம்..., நம்முடைய சொந்த இதயத்தினுள் என்ன இருக்கிறது என்பதை நமக்கு நாமே பார்க்க முடியாது என்பது தான். அதனால் தான்... தாவீது ஒரு முறை, "உமக்கு வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டானால், அதைச் சுட்டிக்காட்டும்" என்று ஜெபித்தார் (சங். 139:24). நம்மிடத்தில் என்னென்ன பாவ வழிகள் இருக்கின்றன.... என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்வதற்கு, .... தேவனும், மற்ற மக்களும் நமக்கு அடிக்கடி உதவ வேண்டியது அவசியம். பிரச்சனையின் மையம் தீர்க்கப்பட்டுவிட்டால்.... மீதமுள்ளவை தானாகவே வரிசைப்படுத்தப்பட்டு, தீர்க்கப்பட்டுவிடும்.
உங்களில் இருக்கிற.... தேவனை வேதனைப்படுத்தக் கூடிய எந்த காரியத்தையும், சுட்டிக்காட்டச் சொல்லி.... எவ்வளவு அடிக்கடி நீங்கள் அவரிடம் கேட்கிறீர்கள்?
வெளியில் இருந்து நல்லவர்களாய் இருங்கள். உள்ளிருந்து.... இன்னும் சிறந்தவர்களாய் இருங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மைக் கனப்படுத்தவும், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் தக்கதாக, என் இருதயத்தை சுத்திகரித்தருளும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment