பிரச்சனையில் பொருத்தனைகள்
B.A. Manakala
என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். சங். 66:14.
"பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே...., என் மகன் மிகக் கடுமையான நோய்வாய்ப்பட்டான். தேவன் அவனை குணமாக்குவாரானால்...., அவன் கர்த்தருடைய ஊழியத்திற்காய் பிரித்தெடுக்கப்பட்டவனாய் இருப்பான்... என நான் கர்த்தருக்கு ஒரு பொருத்தனை பண்ணினேன்." என்று ஒரு தாயார் கூறினார்கள்.
இந்த சங்கீதத்தில் (66:14) நாம் காண்பது போலவே, நாமும்..., பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கையில், பொருத்தனைகளைச் செய்ய முயல்கிறோம். பிரச்சனைகளில் இருந்து வெளிவர..., அநேகமாய், இது ஒரு நல்ல வழி தான். ஒருவேளை....., தேவனும், யாரையாகிலும் ஒரு பொருத்தனை செய்ய வைக்கவோ, அவருக்குக் கீழ்ப்படிய வைக்கவோ, அல்லது அவருடைய திட்டத்தை நிறைவேற்றவோ..., உதவும் ஓர் ஏதுவாகப் பிரச்சனைகளைப் பயன்படுத்தக் கூடும். பிரச்சனைக்காகக் காத்திராமல், கர்த்தர் விரும்புகிற போதும், விரும்புகிற படியும், அவருக்குப் பொருத்தனைகளை ஏறெடுப்பதுவே, நமக்குச் சாலச் சிறந்ததாய் இருக்கும். மேலும்...., பொருத்தனைகளை நிறைவேற்ற முடியாமல் போகுமென்றால், நீங்கள் பொருத்தனைகளைச் செய்யாதிருப்பதே மேல்.... என்பதை நினைவில் கொள்ளுங்கள் (பிர. 5:5).
நீங்கள் சில பொருத்தனைகளைச் செய்ய... தேவன் விரும்புகிறார் என்றால்...., அதை நீங்கள் எங்ஙனம் அறிந்துணர்வீர்கள்?
கர்த்தர் செய்யச்சொல்லி வழிகாட்டுகிற பொருத்தனைகளைச் செய்வதற்குத் தயங்காதீர்கள். கர்த்தருக்குப் பண்ணின பொருத்தனைகளை நிறைவேற்றுகிறதில் உறுதியாய் இருங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, நீர் விரும்புகிற பொருத்தனைகளைச் செய்யவும், அதை நிறைவேற்றவும், எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment