நெருப்பு மற்றும் வெள்ளத்தின் மூலம் செழிப்பு
B.A. Manakala
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப் போகப் பண்ணினீர். தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம். செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டு வந்து விட்டீர். சங். 66:12.
ஒரு முறை, நாங்கள், 'அமைதிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் சுற்றுலா தலத்தைப் பார்வையிடச் சென்றோம். காட்டிலே..... சேறும் பாறைகளும் நிறைந்த சாலையின் வழியாகச் சென்ற... இரண்டு மணி நேர ஜீப் சவாரி.... எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் மலை உச்சியில் இருந்து பார்த்த இயற்கைக்காட்சி மிகவும் அற்புதமாக இருந்ததால், நாங்கள் அந்தக் கடினமான பயணத்தைப் பற்றி மறந்து போனோம்.
நாம் இந்த பூமியிலே.... அக்கினி மற்றும் வெள்ளத்தினூடே செல்கிறோம். ஆனால் சென்று சேரப்போகும் இடத்தில்... ஏராளம் செழிப்பு இருக்கிறது (சங். 66:12). தளர்வின்றி, தொடர்ந்து முன்னேறிச் செல்ல, இந்த மூன்று விஷயங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்...: 1) உங்களோடே கூட பயணம் செய்து கொண்டிருக்கிற மற்றவர்களும் இருக்கிறார்கள். 2) செல்லுகிற பாதையை விட..., சேருகிற இடத்தின் மீது கவனத்தை செலுத்துங்கள். 3) சேர வேண்டிய இலக்கிற்கு, உங்களைக் கூட்டிச் செல்ல.... நிச்சயமாகவே தேவன் போதுமான திறனுள்ளவராய் இருக்கிறார்.
களைப்பூட்டுகிற இந்த பயணத்தின் மீதிருந்து..., உங்கள் கவனத்தை எவ்வாறு மாற்றுவீர்கள்?
நம் பயணம் கரடு முரடானது தான்...; நம் இறுதி இலக்கோ.... சீரும் சிறப்புமாக இருக்கும்!
ஜெபம்: கர்த்தாவே, என் கரத்தைப் பிடித்து, இந்தக் கடினமான பாதை வழியாக... என்னை வழிநடத்தும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment