மரணத்திலிருந்து மீட்பு
B.A. Manakala
நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார். ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. சங். 68:20.
அவர் ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கிக் கொண்டார். சுற்றியிருந்த ஜனங்கள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு... பின்னர் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களில்...., ஒருபோதும் எதிர்பாராத, மிகவும் துக்கமான செய்தியோடு, மருத்துவர் வெளியே வந்தார்!
உதவிக்காக...., மருத்துவர்களை, மிகத் தீவிரமாக நாம் நோக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால் சென்று சமாளிக்க.... அவர்களால் முடியாது. இறுதியாய் நம்மோடு பகிர்ந்து கொள்ள, அவர்களிடம் துக்க செய்தி மட்டுமே இருக்கக் கூடும். சில ஜனங்கள், மருத்துவர்கள் தான் தவறிழைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மீது வருத்தம் கொள்கிறார்கள்.
பெரும்பாலும், நாம் சரீரப்பிரகாரமான மரணத்திற்கு மட்டுமே பயப்படுகிறோம். அதனால் தான், பூமியிலே நாம் செய்கிற பெரும்பாலான விஷயங்கள், சரீரத் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே உள்ளது. ஆனால் தேவன், நம்மை சரீர மற்றும் ஆவிக்குரிய மரணத்திலிருந்து மீட்கிறார். இயேசுவும்..., தம்மைத் தாமே சரீர மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து..., பரத்திற்கு எழுந்தருளிப் போகும் முன்னர்..., மகிமையடைந்த சரீரத்தைப் பெற்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுடைய தற்போதைய சரீரம், நித்தியமாக வாழ்வதற்கானது அல்ல.... என்பதை நீங்கள் அறிந்துணர்கிறீர்களா?
'மரணத்தின் மூலம் வாழ்க்கை' என்பது வேதத்தின் நியமம்; 'வாழ்ந்து மரி' என்பது உலகத்தின் கொள்கை!
ஜெபம்: ஏகாதிபதியான தேவனாம் என் இரட்சகரே, என் கவனத்தை எப்போதும் உம் மீது திருப்ப, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment