தங்கள் அக்கிரம வழிகளை நேசிக்கிறவர்கள்!
B.A. Manakala
மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். சங். 68:21.
"கழுவப்பட்ட பன்றி சேற்றில் புரள்கிறது போல"... என்பது வேதத்தில் காணப்படுகிற ஒரு பழமொழி (2 பேது. 2:22). ஒரு பன்றியைக் குளிப்பாட்டினாலும், அது தன் சுபாவத்தில் இருந்து மாறுகிறதில்லை. ஆனால், நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் போது..., நம்மிலே ஒரு மாற்றம் நடக்கிறது.
பொதுவாக, நாம் அக்கிரம வழிகளைப் பின்பற்ற விரும்புகிறதில்லை. ஆனாலும், தேவனை நேசிக்கிறவர்கள் கூட, தங்கள் பாவ வழிகளை விரும்பி, இரகசியமாய் பின்பற்றத் தக்கதாய்... அதைத் தேர்ந்தெடுக்க முடியும். எனினும், 'இது தேவன் வெறுக்கிற ஒரு காரியம்' என்பதும் 'இதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என்பதும் மேற்காணும் வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது (சங். 68:21). நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், பாவம் செய்வதற்கான சுதந்திரத்தை, தேவன் நம்மிடம் இருந்து எடுத்துப் போடுகிறதில்லை. எனவே..., நீதியின் வழியை நேசித்து, அதைப் பின்பற்றுவது குறித்து, நாம் உறுதியாகவும், தீவிரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். நம்மில் இருக்கிற பரிசுத்த ஆவியானவர், நீதியின் பாதையைப் பின்பற்றுவதற்கு, நம்மை பலப்படுத்துவார். சில சமயங்களில்..., நாம் முழுமையாக வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் வரை, அல்லது... மற்ற தேவ பிள்ளைகள் சுட்டிக்காட்டும் வரை, நம்முடைய சொந்த பாவ வழிகளை, நம்மால் அடையாளம் கூட காண முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
'நீங்கள் பின்பற்றுகிற அக்கிரம வழிகள் ஏதேனும் உள்ளதா'... என்று உங்களை நீங்களே எவ்வாறு ஆராய்வீர்கள்? நீங்கள் எப்படி அவற்றிலிருந்து முழு உறுதியோடு விலகி வருவீர்கள்?
மெய்யான மாற்றம் பெற்றவர்கள்..., 'பகிரங்கமான' மற்றும் 'அந்தரங்கமான' பாவ வழிகளை வெறுப்பார்கள்!
ஜெபம்: கர்த்தாவே, என் சொந்த அக்கிரம வழிகளை எனக்கு வெளிப்படுத்தும். மிகவும் தாமதமாகிவிடும் முன், நான் அவற்றிலிருந்து விலகி விடுவேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment