சமுத்திரத்தின் ஆழங்கள்
B.A. Manakala
என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன். அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார். சங். 68:23.
'விக்டர் வெஸ்கோவோ' என்பவர், 2019ம் வருடம், ஆகஸ்ட் 24ம் தேதி, 'மரியானா அகழி'யில் (Mariana trench) 'சேலஞ்சர் டீப்' (Challenger Deep') என்று அழைக்கப்படும் கடலின் அடி மட்டம் வரை (5,550 மீட்டர்) மூழ்கிச் சென்றார். ஆயினும்..., 80 சதவிகிதத்திற்கும் அதிகமான கடல் பகுதிகள் இன்றுவரை ஆய்ந்தறியப்படாததாகவே உள்ளன! உலகின் கடல் பகுதிகளில், 7 சதவிகிதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன!
தேவன் குறிப்பிடுகிற 'சமுத்திரத்தின் ஆழங்கள்' பற்றி வரையறுக்க, நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை. ஆனால் சிருஷ்டிகரிடம் உண்டு! அவருடைய படைப்பில், இதுவரை நாம் எவ்வளவு ஆராய்ந்து அறிந்துள்ளோம் என்பது கூட அநேகமாய் நமக்குத் தெரியாது! அவரிடமிருந்து நாம் ஒளித்துக் கொள்ளக்கூடிய இடம் ஒன்றும் இல்லை. நாம் நட்சத்திரங்களுக்குள்ளே நம் கூட்டைக் கட்டினாலும், அங்கிருந்தும் நம்மை விழத்தள்ள அவரால் முடியும் (ஒபதி. 1:4).
தேவனைப் பற்றி இன்னும் அதிகமாய் ஆராய்ந்து அறிந்து கொள்ள, நீங்கள் ஆவலாய் உள்ளீர்களா?
தேவனைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ.... , அநேகமாய் அவர் அப்படியில்லை... ஏனென்றால்.., அவரைப் பற்றி மிகக் குறைவாகவே நமக்குத் தெரியும்!
ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை மெய்யாய் அங்கீகரித்து, கனம் பண்ணத்தக்கதாய், உம்மைப் பற்றியும், உம்முடைய படைப்புகளைப் பற்றியும், நான் இன்னும் அதிகமாய் ஆராய்ந்து அறிந்து கொள்ள, எனக்கு தயவு கூர்ந்தருள்வீராக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment