தேவனின் நகர்வலம்

B.A. Manakala

தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள். என் தேவனும், என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள். சங். 68:24.

பல வருடங்களுக்கு முன்பு, சகேயு என்ற ஒரு மனிதன், ஓர் ஊர்வலத்தைப் பார்த்தான். அவன் குள்ளனாய் இருந்தபடியால், அந்த ஊர்வலத்தின் நடுவில் வருகிறது யார் என்பதைப் பார்க்க, அவன் ஒரு மரத்தின் மேல் ஏற வேண்டியதாய் இருந்தது. கடைசியாக, ஊர்வலம் அந்த மரத்தடியில் வந்த போது, ஊர்வலத்தின் நடுவில் இருந்த இயேசு, மேலே ஏறிட்டுப் பார்த்து...., "சகேயுவே, இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்" என்று கூறினார்.

பல்வேறு வகையான ஊர்வலங்கள் நம் பார்வைக்கு வருகிறது. நாமும், அவ்வகை ஊர்வலங்களால் அடிக்கடி ஈர்க்கப்பட்டிருக்கலாம். தேவனுடைய பவனி, அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்கிறது (சங். 68:24). இன்று நாமே அவருடைய ஆலயம். அவருடைய பவனி நம்மை நோக்கி வருகிறது.

தேவன் நம்மில் இருந்தாலும்கூட, பெரும்பாலும், நாமே ஊர்வலத்தின் மையத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறோம். ஒருவேளை, நம்மில் வசிக்கிற தேவனைக் காட்டிலும், நம்மை நாமே பகட்டாய் காட்டிக் கொள்கிறவர்களாகவும், மற்றவர்களை நம்பால் ஈர்க்கிறவர்களாகவும் நாம் இருக்கக் கூடும்.

நீங்கள் மற்றவர்களை, தேவனுடைய பவனிக்கு நேராய் திசைகாட்டி வழிநடத்துகிறீர்களா அல்லது உங்களுடைய சொந்த ஊர்வலத்திற்கா?

நீங்களே ஊர்வலத்தை முன்நின்று நடத்திச் செல்வீர்களானால், தேவன் பின்இருக்கையையே எடுத்துக் கொள்ளக்கூடும்.

ஜெபம்: கர்த்தாவே, நகர்வலத்தின் தலைவராய் எப்போதும் உம்மையே நான் அனுமதிப்பேனாக. ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்