வாழ்வின் ஆதாரம்
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள். சங். 68:26.
தட்டைப்புழுக்களை, இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டிப் போட்டாலும், அவைகளால் மீளுருவாக்கம் செய்து, மறுபடியும் உயிர் வாழ முடியும்! (இருபாலின உயிரி) சிலவற்றுக்கு, ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டுமே இருப்பதால்..., தேவைக்கேற்ப, அவைகளால் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக் கொள்ள முடியும். தேவன் அவைகளுக்கு, மீளுருவாக்கம் செய்யும் திறனைக் கொடுத்தார். ஆனாலும்..., தலையும் வாலும் கொண்ட எல்லா படைப்புகளுக்கும் இந்த ஆற்றல் இல்லை.
தேவனே வாழ்வின் மூல ஆதாரம். ஒரே ஒருவர் மட்டுமே, " நானே....ஜீவன்" (யோவா. 14:6) என்றார். நம்மில் ஜீவன் இல்லையெனில், நாம் மரித்துப் போனவர்கள். வேறு விதமாகக் கூறின், வாழ்வின் மூல ஆதாரமாகிய அவர் இன்றி..., நம்மால் வாழ முடியாது. சரீரத்தை தக்கவைப்பதற்கான ஜீவன், மற்றும் நம் ஆவியைத் தக்கவைப்பதற்கான ஜீவன், என இரண்டு உள்ளன. தேவனே அவை இரண்டிற்குமான ஆதாரமாகத் திகழ்கிறார். ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்திலிருந்து, ஆதாமும் ஏவாளும் கனியைப் புசித்த போது, அவர்களுக்கு ஏற்பட்ட உடனடி மரணம், ஆவிக்குரிய ரீதியானது. ஆனாலும், கடைசியாக... அவர்கள் சரீரப்பிரகாரமாகவும் மரித்துப் போனார்கள்.
'வாழ்வின் மூல ஆதாரமாகத் திகழும் தேவன், அதை நித்திய நரகத்தில் முடிக்க, அனுமதிக்க முடியாது' .... என்கிற வாதத்தை, நான் ஏற்றுக்கொள்கிறதில்லை. 'பரலோகத்தில் தேவனோடு....' அல்லது 'நரகத்தில் சாத்தானோடு...' என இவ்விரண்டிற்கிடையே, நித்தியத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை தேவன் நமக்கு அளித்துள்ளார்!
வாழ்க்கைக்கான ஒரே மூல ஆதாரமாக, தேவனை நீங்கள் பார்க்கிறீர்களா?
நாமின்றி தேவனால் வாழ முடியுமென்றாலும், தேவனின்றி நம்மால் வாழ முடியாது; எனினும் அவர் நம்மோடு வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்!
ஜெபம்: கர்த்தாவே, நீர் இருப்பதால் மட்டுமே நான் உயிர் வாழ்கிறேன் என்பதை, எனக்கு நானே தவறாமல் நினைவுபடுத்திக் கொள்ள, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment