சிறிய தலைவர்
B.A. Manakala
அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு. சங். 68:27.
குடும்பமாய் நாங்கள் காலாற நடந்து வரும்படி செல்கிற போதெல்லாம்... எங்கள் சிறு மகன் முன்னால் சென்று, எங்கள் தலைவனாய் இருக்க விரும்புகிறான். சில சமயம், எங்கு செல்வது என்று தெரியாமல், அவன் மாட்டிக் கொள்வதுண்டு. பல வேளைகளில், அவன் வழியை யூகித்து, முன்னேறிச் செல்கிறான்.
'சின்ன தலைவர்' என்பது ஒரு முரணான சொற்றொடராய்த் தோன்றுகிறது. 'ஒரு தலைவர்..., சிறியவராய் இருக்க முடியுமா?' அல்லது 'சிறிய நபர் ஒருவர், தலைவராய் இருக்க முடியுமா?' போன்ற கேள்விகள் நம் மனதில் இருக்கலாம். மனித கண்ணோட்டத்தில், இவை இரண்டும் முரண்பாடானவையே. இந்த உலகில்...., பணம், சாமர்த்தியம், அறிவு, செல்வாக்கு, நல்ல தோற்றம்... இவை போன்றவை உள்ள ஒரு நபர் தலைவராக முடியும். அதனால் தான்..., இந்த குணாதிசயங்களெல்லாம் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும்... என்று நாம் பெரும்பாலும் நினைத்துக் கொள்கிறோம். தலைமைத்துவத்திற்கு மிகச் சிறந்த மாதிரியை..., 'நான் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யும்படி வந்தேன்' (மத். 20:28) என்று கூறின இயேசுவில் நாம் காணலாம். உண்மையான தலைவர்கள், எப்போதுமே தலைவர்களாய் ஏற்றுக்கொள்ளப்படாதிருக்கலாம்.
நீங்கள் மனிதரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவரா...? அல்லது தேவனாலா...?
உங்களுக்குப் பதவி இருக்கிறதால், நீங்கள் தலைவராகிறதில்லை. தலைமைத்துவ பண்புகள் உங்களிடம் இருந்தால் தான் நீங்கள் ஒரு தலைவர்.
ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து, தலைமைத்துவப் பண்புகளைக் கற்றுக் கொள்வேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment