யுத்தத்தில் மகிழ்ச்சியா?
B.A. Manakala
நாணலிலுள்ள மிருகக் கூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடு கூட, ரிஷபக் கூட்டத்தையும் அதட்டும். ஒவ்வொருவனும் வெள்ளிப் பணங்களைக் கொண்டுவந்து பணிந்து கொள்ளுவான். யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார். சங். 68:30.
பல வருடங்களுக்கு முன்பு...., எனக்கு ஒரு நண்பன் இருந்தான். பொதுவாக, அவன் வகுப்பில் மிகவும் அமைதியாக இருப்பான். ஆனால், நண்பர்களிடையே சண்டை வந்தால், அவன் அங்கே தோன்றுவான். மிகவும் மென்மையான தொனியிலே அவனிடம் இருந்து வரும் ஒரு ஜோடி கேள்விகள், அந்த மொத்த சூழ்நிலையையும் சில விநாடிகளில் அமைதியாக்கி விடும். அவன் பிரச்சனைக்கான காரணத்தை விசாரித்து, அதைத் தீர்ப்பதற்கான ஒரு வழியையும் பரிந்துரைப்பான். அவனுடைய தலையீடு, பெரும்பாலும் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளது!
யுத்தங்களில் பிரியப்படுகிறவர்கள் சீக்கிரமே சிதறடிக்கப்படக் கூடும் (சங். 68:30). மனிதனில் உள்ள பாவ சுபாவத்தின் காரணமாக, யுத்தங்களும், சண்டைகளும் பூமியிலே சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் சமாதானத்தைப் பெற்றிருக்கிறவர்களாகிய நாம், சமாதானம் பண்ணுகிறவர்களாய் இந்த பூமியில் இருக்க வேண்டும். பரலோகில் இருந்து பூமிக்கு வந்த இயேசு, சமாதானம் பண்ணுகிறவராய் இருந்தார். நாம் ஒவ்வொருவரும், இப்பூமியில் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பதற்கு, அவருடைய ஆவியினால் இயக்கப்படுகிறோம். சிலர் பிரச்சனை பண்ணுகிறவர்களாகவும், சிலர் சண்டைகளை ரசித்து ப் பார்க்கிறவர்களாகவும், சிலர் அந்தக் காட்சியிலிருந்தே நழுவப் பார்க்கிறவர்களாகவும் உள்ளனர். வெகு சிலரே சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்கிறார்கள்.
மேலுள்ள பிரிவுகளில், நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?
பிரச்சனையைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த விஷயமென்றால்...., இயேசுவை பூமிக்கு அனுப்புவதற்கு பதிலாக, தேவன் நம்மையெல்லாம் அழிக்க அனுமதித்திருப்பார்!
ஜெபம்: கர்த்தாவே, சமாதானத்தை நேசிக்கவும், பூமியிலே சமாதானம் பண்ணுகிறவனாய் இருக்கவும், எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment