தேவனுக்குப் பாடுங்கள்
B.A. Manakala
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். சங். 68:32.
ஒரு முறை, நான் ஓர் ஆலய ஆராதனையில் பங்கு பெற்றேன். வழக்கம் போல், ஏராளம் துதிப் பாடல்கள் பாடப்பட்டன. என் இருதயம் அல்ல, என் உதடுகள் மட்டுமே பாடிக் கொண்டிருக்கிறது என்பதை..., ஒரு பாடலின் இறுதியில் நான் உணர்ந்தேன். பாடல் முழுவதும்..., தேவனை நினைக்காமலேயே..., சத்தமாகவும், காதுக்கினிமையாகவும், என்னால் பாட முடியும் என்பதை உணர்ந்து, நான் மிகவும் வருந்தினேன்!
தேவனைப் புகழ்ந்து பாடும்படி, எகிப்து மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட அனைத்து தேசங்களையும் சங்கீதக்காரர் ஊக்குவிக்கிறார் (சங். 68:31-32). ஒரு நாளிலே, எல்லா தேசங்களும் தேவனுக்குக் காணிக்கையைக் கொண்டு வரப்போகிறது என்பது மெய் தான். ஒரு நாளிலே..., ஒவ்வொரு முழங்காலும் முடங்கி..., 'இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்' என்று ஒவ்வொரு நாவும் அறிக்கை பண்ணத் தான் போகிறது. அது எதிர்காலத்தைப் பற்றியது. தற்போது என்ன...?
நான் தேவனுக்கு எப்படிப் பாடுகிறேன்? 'நீங்கள்..., உங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறீர்கள். உங்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகி இருக்கிறது' (ஏசா. 29:13) என்று கர்த்தர் சொல்வாரோ?
உங்கள் இருதயம் ஈடுபட்டிருந்தால்... பாடுங்கள்; உங்கள் உதடுகள் மட்டுமே பாடுகிறதென்றால்..., நிறுத்துங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, பாடுகிற வாயைக் காட்டிலும், பாடுகிற இருதயம் எனக்கு இருப்பதாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment