அவருடைய சத்தம் முழங்குகிறது

B.A. Manakala

ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள். இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப் பண்ணுகிறார். சங். 68:33.

சாதாரண உரையாடலின் ஒலி அளவானது, சுமார் 60 டெசிபல் (dB) இருக்கும். ஒரு இடியின் ஒலி அளவு, சுமார் 120 டெசிபல் (dB) இருக்கும். ஒலி அளவில்... 10 டெசிபல் அதிகரிப்பு என்றால்...,10  மடங்கு அதிகமாக... சத்தம் பலமாய் இருக்கும் என்று அர்த்தம். இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே...,1883ம் வருடம் ஏற்பட்ட 'க்ரகட்டோவா எரிமலை வெடிப்பே..., (Krakatoa Eruption)(180 dB) பூமியின் மேற்பரப்பில் உண்டான மிகவும் பலத்த சத்தம் ஆகும். 194(dB) டெசிபலுக்கு அதிகமான சத்தம், பூமியின் மேற்பரப்பில் நீடிக்க முடியாது! 120(dB) டெசிபல் ஒலி அளவுடைய பலத்த சத்தமானது, மனிதனின் கேட்கும் திறனுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2000 ஜனங்கள் மின்னல் தாக்கி பலியாகின்றனர்.

தேவன் நம்மோடு இடிமுழக்கக் குரலில் பேசினால்..., அது நமது கேட்கும் திறனுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது! நாம் தேவனைப் பற்றி சிந்திக்கிறதற்கெல்லாம் மிகவும் அப்பாற்பட்டவர் அவர்...  என்பதை நாம் உணர்கிறோமா? 68ம் சங்கீதத்தின் 32 முதல் 35 வரை உள்ள வசனங்கள், தேவனின் வலிமைமிக்க சக்தியை அறிந்து, அவரைத் தொழுது கொள்வதைப் பற்றிக் கூறுகிறது. 'தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக' என்பதே அந்த சங்கீதத்தின் இறுதி வரியாக உள்ளது. மனித பாஷையில்..., 'அவர் மிகவும் அருமையானவர்!' என்று மட்டுமே நம்மால் கூற இயலும். ஆயினும், 'தேவன் யார்' என்பதை வர்ணிக்க, இது போதுமானதல்ல!

தேவனைத் தொழுது கொள்ளுகிற வேளையில், எந்த அளவுக்கு நீங்கள் அவரைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள்?

தேவனின் 'வலிமைமிக்க ஆற்றல்'... எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை, வரையறுக்கப்பட்ட மனித மூளையால் புரிந்து கொள்ள இயலாது!

ஜெபம்: கர்த்தாவே, நான்  இன்னும் சிறப்பாய் உம்மை தொழுது கொள்ளத்தக்கதாக, தினமும் உம்மைப் பற்றி... இன்னும் அதிகமாய் எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்