அவருடைய ஜனங்களுக்கு அவருடைய வல்லமை

B.A. Manakala

தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர். இஸ்ரவேலின் தேவன், தம்முடைய ஜனங்களுக்குப் பெலத்தையும் சத்துவத்தையும் அருளுகிறவர். தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. சங். 68:35.

பவுல் என்று ஒரு மனிதர் இருந்தார். அவருக்குப் பல தேவைகள் இருந்தன. சில சமயங்களில், அவர் வெறும் வயிற்றோடு வாழ்ந்திருக்கிறார். சில வேளை, உயிர் வாழத் தேவையான ஒன்றுமே அவருக்கு இல்லாதிருந்திருக்கிறது! அப்படிப்பட்ட வேளையில் அவர், "என்னைப் பெலப்படுத்துகிறவராலே, என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்; எதுவுமே இல்லாமல் வாழவும் முடியும்" என்று கூறினார்.

தேவன் தம்முடைய ஜனங்களுக்குபெலத்தையும் சத்துவத்தையும் அருளுகிறார். (சங் 68:35) நாம் பெரும்பாலும் 'தேவனுடைய வல்லமை என்ன' என்பதைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். 'போரில் வெற்றி பெறுவதற்கு... அல்லது ஒரு சத்துருவைத் தோற்கடிப்பதற்கு' ... போன்ற நம்முடைய காரியங்களைச் செய்து முடிக்கவே தேவனுடைய வல்லமை என்று நாம் நினைக்கிறோம். ஆனால்..., இந்த உலகில் வாழ்கிற போது, நாம் கடந்து செல்ல நேர்கிற வியாதிப்படுக்கை, வறுமை, தனிமை, கவலைகள் உள்ளிட்ட எல்லா வகையான சூழ்நிலைகளையும் மேற்கொள்ளவோ அல்லது கடந்து செல்லவோ...., நமக்குள் இருக்கிற அவருடைய வல்லமையானது, நம்மை பெலப்படுத்துகிறது.

'என் கிருபை உனக்குப் போதும்' என்று சொன்னவருடைய குரலை நீங்கள் கேட்கிறீர்களா?

சிந்திப்பதற்கான ஆற்றலைக்கூட தேவனிடமிருந்து பெறுகிற மனிதன்..., தனக்குப் போதுமான ஆற்றல் இருப்பதாக சிந்திக்க முனைகிறான்!

ஜெபம்: கர்த்தாவே, உம் நிமித்தம் எனக்கு இருக்கிற சத்துவத்திற்காக... உமக்கு நன்றி செலுத்த எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்