உளையில் அமிழ்ந்து போதல்

B.A. Manakala

ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன். நிற்க நிலையில்லை.  நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன். வெள்ளங்கள் என் மேல் புரண்டு போகிறது. சங். 69:2.

'உளை' என்பது, செல்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களுள் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக..., உங்களுக்கு ஒத்தாசைக்கு ஒருவரும் இன்றி, நீங்கள் தனியாக இருப்பீர்களென்றால், தப்பித்துக் கொள்ள நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மீறி..., நீங்கள் மூழ்கிப் போவீர்கள்!

நாம் அடிக்கடி, இந்த உலகத்தில் பெருவெள்ளத்திலும், உளையிலும் அமிழ்ந்து போகிறோம். தேவன் மட்டுமே நம்மை இப்படிப்பட்ட உளையான சேற்றிலிருந்து மீட்க முடியும் (சங். 69:1-2). தேவன் நம்முடைய கரங்களைப் பிடித்திருக்கும் போது, நம்மால் மூழ்க  முடியாது. ஆயினும்நாம் இந்த உலகில் வாழ்கிற காலம் வரைக்கும், நம்மை அமிழ்ந்து போகச் செய்யும் பல விஷயங்கள், இன்னும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறது. அடிக்கடி நாம் தேவனை விட்டு விலகி ஓடி, இந்த உலகத்தின் பிரச்சனைகளில் மூழ்கிப் போகிறோம். 

இந்த உலகில் மூழ்கிக் கொண்டிருக்கிற மற்றவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களுக்கு நன்மை செய்யவும், நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால்...நம்முடைய சொந்த பிரச்சனைகளில்..., நாமே மூழ்கிக் கொண்டிருப்போமென்றால், நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்?

நீங்கள் ஒருமுறை உளையில் மாட்டிக் கொண்டால்...., நிலைநிற்க, கால்பிடிப்பைக் கண்டுபிடிப்பது, கிட்டத்தட்ட சாத்தியமற்றது!

ஜெபம்: கர்த்தாவே, நான் ஒருபோதும் உம்மை விட்டு விலகி ஓடி, பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதிருப்பேனாக. ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்