களைப்புற்று சோர்ந்து போனீர்களா?
B.A. Manakala
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன். என் தொண்டை வறண்டு போயிற்று. என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப் போயிற்று. சங். 69:3.
தானியேல், தேவனிடம் ஜெபிப்பதில் சோர்ந்து போகவில்லை. காரியம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அவர் தினமும் மூன்று வேளையும் ஜெபித்துக் கொண்டிருந்தார்! அவருடைய வாழ்வில் வலி நிறைந்த தருணங்கள் அவருக்கு இருந்த போதிலும், அவர் அதைச் செய்தார். எல்லாம் சுமூகமாக இருந்த போதும் கூட, அவர் ஜெபித்தார்.
நாம் சோர்வுற்று களைத்துப் போவது இயல்பானதே. சில சமயங்களில், 'ஒரு குறிப்பிட்ட காரியமானது...., ஒரு குறிப்பிட்ட விதத்தில்..., நாம் விரும்புகிற ஓர் குறிப்பிட்ட காலத்தில்... மாற வேண்டும்' என்று நாம் தேவனிடம் ஜெபிக்கிறோம். ஜெபிப்பதில் சோர்ந்து போவதற்கு, நமக்கு இதுவும் கூட ஒரு காரணமாய் இருக்கக் கூடும். நாம் விரும்புகிற வண்ணமாகவே தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். சில நேரம், நம்முடைய ஜெபங்களுக்கு தேவனின் பதில், நாம் எதிர்பார்க்கிற அதே விதத்தில் இல்லாதிருக்கலாம். நம்முடைய சந்தர்ப்பங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட முறையில் பதிலளிப்பதின் மூலம், அவர் நிறைவேற்ற வேண்டிய ஓர் குறிப்பிட்ட நோக்கம் இருக்கக் கூடும்.
உங்களுடைய ஜெபத்திற்கு பதிலளிப்பதற்கான மிகச் சிறந்த வழியை தேவன் அறிந்து, அதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்வீர்கள்?
நம்முடைய ஜெபங்கள், தேவனின் திட்டங்களையும், நோக்கங்களையும் மாற்ற முடியாது; ஆனால் அவை நம்மை மாற்றுகின்றது!
ஜெபம்: கர்த்தாவே, நான் களைப்புற்று சோர்வாய் உணர்கிற வேளையிலும், நீர் என் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும். என் வாழ்க்கைக்கான உம்முடைய நோக்கங்களுக்கு அடங்கி இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment