ராஜா vs ராஜாக்கள்
B.A. Manakala
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம் ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். சங். 68:29.
வாத்துக்கள், தங்கள் நீண்ட நெடிய பயணத்தின் போது, 'வி' (V) வடிவ உருவாக்கம் எடுத்துப் பறக்கின்றன. வழிநடத்தும் தலைவருக்கு, பறப்பது கடினமாகிறதினால்... அவ்வாத்துக்கள் வழிநடத்திச் செல்வதில்... சுழற்சி முறையில் பங்கெடுக்கின்றன. இப்படிச் செய்வதன் மூலம், ஓய்வு எடுத்துக் கொள்ளும் முன்னர்..., அவைகளால் நெடு நேரம் பறக்க முடிகிறது.
பூமியின் ராஜாக்கள், பரலோக ராஜாவைத் தொழுது கொள்கிறார்கள் (சங் 68:29). நம்மில் சிலருக்கு, பூமியிலே மிக உயர்ந்த பதவிகள் இருந்தாலும்..., பரலோகத்தின் உச்சநிலை அதிகாரத்தை நாம் அங்கீகரித்தாக வேண்டும். தேவனின் எல்லா படைப்புகளும் உச்சநிலை அதிகாரத்திற்கு அடங்கி இருக்கின்றன. மனிதகுலத்திற்கு, தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதாலோ, அல்லது நம்முடைய ஞாபக மறதியாலோ..., நாம் அடிக்கடி தேவனை புறக்கணிக்க முனைந்து, நம்முடைய சொந்த வழியில் செல்கிறோம்.
பூமியின் ராஜாக்கள் உங்களை ஒருபோதும் அறியாதிருக்கலாம்; உங்களுக்குத் தனிப்பட்ட கவனம் கொடுக்காதிருக்கலாம். ஆனால், பரலோக ராஜாவோ..., உங்கள் மீது அதிக ஆர்வத்தோடு இருக்கிறார்; உங்களை நேசிக்கிறார்; மேலும், உங்களோடு வசிக்க விரும்புகிறார்!
ஏகாதிபதியான ராஜாவைப் பற்றி சிந்திக்கும்படி..., உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணங்கள் இருந்ததுண்டா?
ஒப்புயர்வற்ற ராஜாவுக்கு அடங்கி இருக்கிற பூமியின் ராஜாக்கள்...., ஞானத்தோடும், விவேகத்தோடும் அரசாள்வார்கள்!
ஜெபம்: கர்த்தாவே, நீர் ஒருவர் மாத்திரமே 'ஒப்புயர்வற்ற ராஜா' என்பதை அறிந்து கொள்கிற வாய்ப்புகளை எனக்குத் தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment