அவர்கள் பெயர்களை அழிக்கவா?
B.A. Manakala
ஜீவ புஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக. நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. சங். 69:28.
ஒரு சுற்றுலாவின் போது..., நாங்கள் ஒரு குறிப்பிட்ட கேளிக்கை சவாரிக்குச் செல்ல முடிவு செய்தோம். நாங்கள் நான்கு பேர் இருந்தோம். ஆனால் அந்த சவாரிக்கு, மூன்று இருக்கைகள் மட்டுமே மீதம் இருந்தன. எங்களில் ஒருவருக்கு, அந்த சவாரிக்குச் செல்ல ஆசை இருந்தாலும், அவர் மனமுவந்து..., "நான் விலகிக் கொள்கிறேன். நீங்கள் மூன்று பேரும் செல்லலாம்" என்று கூறினார்.
இந்த வசனத்தில் (சங் 69:28), ' தன்னுடைய சத்துருக்களின் பெயர்களை ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போட வேண்டும்' என்பது தாவீதின் ஜெபமாய் இருக்கிறது! இஸ்ரவேலருக்காக பராமரிக்கப்பட்ட ' வம்சத்தாரின் அட்டவணை' புஸ்தகத்தை... அவர் ஒருவேளை குறிப்பிடுகிறார் போலும் (எசே. 13:9). மரித்துப் போனவர்களின் பெயர்கள் இந்தப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டன.
அநேகம் பேர்கள் ஜீவ புஸ்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று நாம் வாஞ்சிக்கிறோம் (வெளி 3:5). மோசே வழிநடத்திச் சென்ற ஜனங்களின் பாவங்களை..., தேவனால் மன்னிக்க முடியாதென்றால்..., தன்னுடைய பேரை தேவனின் புஸ்தகத்திலிருந்து நீக்கி விடும்படி... மோசே ஒருமுறை தேவனிடம் ஜெபித்தார்! (யாத் 32:32). பவுலும் கூட...., தன்னுடைய ஜனங்களை அது இரட்சிக்குமென்றால்... 'தான் கிறிஸ்துவை விட்டு சபிக்கப்பட்டவனாய் இருக்கவும் ஆயத்தம்' என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்! (ரோம 9:2). இங்கே..., மோசேயும், பவுலும் செய்து காண்பித்த... அந்த ஆவிக்குரிய முதிர்ச்சியில் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் ஒருபோதும் யாருடைய பெயரையும் தன்னுடைய புஸ்தகத்திலிருந்து அழித்துப்போட மாட்டார். ஆனால்..., என்னை இரட்சிக்க இயேசு துணிந்தது போல..., மற்றவர்களைக் காப்பாற்ற..., என்னை நானே பணயம் வைக்கத் தயாராக உள்ளேனா?
இன்னும் ஏராளம் பேர்களை ஜீவ புஸ்தகத்தில் சேர்ப்பதற்குக் கடினமாக உழையுங்கள்; பூமிக்குரிய பதிவுகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!
ஜெபம்: கர்த்தாவே, பூமிக்குரிய ஆவணங்களைக் காட்டிலும், பரலோகப் பதிவுகளில் கவனம் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment